< Judges 11 >
1 [There was a man] from [the] Gilead [region] named Jephthah. He was a great warrior. His father was also named Gilead. But his mother was a prostitute.
௧கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
2 Gilead’s wife gave birth to several sons. When they grew up, they forced Jephthah to leave home, saying to him, “You are the son of a prostitute, [not the son of our mother]. So [when] our father [dies], you will not receive any of his property.”
௨கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
3 So Jephthah ran away from his brothers, and he went to the Tob region. While he was there, some worthless men started to spend a lot of time with him.
௩அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
4 Some time later, the Ammon people-group started to fight against the Israelis.
௪சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
5 When that happened [DOU], the leaders of [the] Gilead [region] went to Jephthah to bring him back from the Tob region [to their area].
௫அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
6 They said to him, “Come [with us] and lead our army, and [help us to] fight against the men from the Ammon people-group!”
௬யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
7 But Jephthah replied, “You hated me [RHQ] previously! You forced me to leave my father’s house! So why are you coming to me now, [asking me to help you] when you are experiencing trouble?”
௭அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
8 The leaders from Gilead replied, “[Yes, we are having trouble, and] that is the reason that we have come to you now. If you come with us and [help us to] fight against the Ammon people-group, [after we defeat them, we will appoint] you to be the leader of all us people in [the] Gilead [region].”
௮அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
9 Jephthah replied, “If I go back to Gilead with you to fight against the Ammon people-group, and if Yahweh helps us to defeat them, will you truly appoint me to be your leader?”
௯அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
10 They replied, “Yahweh is listening to everything that we say. [So he will punish us] if we do not do everything that you tell us to do.”
௧0கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
11 So Jephthah went with them back to [the] Gilead [region], and the people appointed him to be their leader and the commander of their army. And Jephthah solemnly promised to Yahweh there at Mizpah [to serve him well].
௧௧அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான்.
12 Jephthah sent some messengers to the king of the Ammon people-group. They asked the king, “What have we [done to make you angry, with the result] that your army is coming to fight [against the people] in our land?”
௧௨பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.
13 The king replied, “[We have come to fight against you Israelis because] you took our land when you came here from Egypt. You took all our land east of the Jordan [River], from the Arnon [River in the south] to the Jabbok [River in the north]. So if you now give it back to us, there (will be peace between us/we will not fight against you).”
௧௩அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
14 [The messengers returned to Jephthah and told him what the king had said]. So Jephthah sent the messengers to the king again.
௧௪யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
15 They said to him, “This is what Jephthah says: ‘It is not [true] that we Israelis took the land from the Moab people-group and the Ammon people-group.
௧௫யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
16 When the Israeli people came out of Egypt, they walked through the desert to the Red Sea, and then [walked across it and traveled to Kadesh town at the border of the Edom region].
௧௬இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
17 They sent messengers to the king of the Edom people-group, to say to him, “Please allow us Israelis to walk across your land.” But the king of the Edom people-group refused. Later we sent the same message to the king of the Moab people-group, but he also refused to allow the Israelis to go through his land. So the Israelis stayed at Kadesh [for a long time].
௧௭இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,
18 Then the Israelis went into the desert and walked outside the borders of the Edom and Moab regions. They walked east of the Moab region, east of the Arnon [River, which is the eastern border of the Moab region]. They did not cross that river to enter [the] Moab [region].
௧௮பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.
19 ‘Then the Israelis sent a message to Sihon, the king of the Amor people-group, who lived in Heshbon [city]. They asked him, “Will you please allow us Israeli people to cross through your land to arrive at the land to which we [are going].”
௧௯அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
20 But Sihon did not trust the Israelis; [he thought that they would steal some of the things in his land]. So he gathered all his troops and they set up their tents at Jahaz [village] and then they attacked the Israelis.
௨0சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
21 But Yahweh, the God whom we Israelis [worship], enabled the Israeli army to defeat [IDM] Sihon and his army. Then they (took possession of/started to live in) all the land where the Amor people-group had lived.
௨௧அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
22 The Israelis took all the land that belonged to the Amor people-group, from the Arnon [River in the south] to the Jabbok [River in the north], and from the desert [in the east] to the Jordan [River in the west].
௨௨யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
23 ‘It was Yahweh, the God whom we Israelis [worship], who forced the Amor people-group to leave as the Israelis advanced. So do you now think that you can force the Israelis to leave [RHQ]?
௨௩இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
24 You take the land that your god Chemosh has given to you. And we will live in the land that Yahweh our God has given to us!
௨௪உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
25 (You are no/Are you) better than Zippor’s son Balak, who was the king of the Moab people-group? He never [RHQ] quarreled with the Israeli people, and he never started to fight against us [RHQ]!
௨௫மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
26 For 300 years the Israeli people have lived in Heshbon and Aroer [cities in your region], and in the surrounding towns, and in all the cities along the Arnon [River]. Why have you people of the Ammon people-group not taken back those cities during all those years [RHQ]?
௨௬இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
27 We have not sinned against you, but you are sinning against me by attacking me [and my army]. I trust that Yahweh, the great judge, will decide whether we Israelis are right, or whether you people of the Ammon people-group are right.’”
௨௭நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
28 But the king of the Ammon people-group did not pay attention to that message from Jephthah.
௨௮ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
29 Then the Spirit of Yahweh took control of Jephthah. Jephthah went through [the] Gilead [region] and through the area where the tribe of Manasseh lived, [to enlist/gather men for his army]. [He finally gathered them together] in Mizpah [city] in [the] Gilead [region] to fight against the Ammon people-group.
௨௯அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
30 There Jephthah made a solemn promise to Yahweh. He said, “If you will enable my army to defeat [IDM] the Ammon people-group,
௩0அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
31 when I return from the battle, I will sacrifice to you the first person who comes out of my house [to greet me]. It will be a sacrifice that will be completely burned [on the altar].”
௩௧நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
32 Then Jephthah [and his men] went from Mizpah to attack the Ammon people-group, and Yahweh enabled his army to defeat them.
௩௨யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
33 Jephthah and his men killed them, from Aroer [city] all the way to the area around the city of Minnith. They destroyed 20 cities, as far as [the city of] Abel Keramim. So the Israelis [completely] defeated the Ammon people-group.
௩௩அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
34 When Jephthah returned to his home in Mizpah, his daughter was the first one to come out of the house to meet him. She was [joyfully] playing a tambourine and dancing. She was his only child; he had no sons and no other daughters.
௩௪யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
35 When Jephthah saw his daughter, he tore his clothes [to show that he was very sad about what he was going to do]. He said to her, “My daughter, you have caused me to become very sad [DOU] because I made a solemn promise to Yahweh [to sacrifice the first one who came out of my house], and I must do what I promised.”
௩௫அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
36 His daughter said, “My father, you made a solemn promise to Yahweh. So you must do to me what you promised, because [you said that you would do that if] Yahweh helped you to defeat our enemies, the Ammon people-group.”
௩௬அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
37 Then she also said, “But allow me to do one thing. (First/before you do what you promised), allow me to go up into the hilly area and wander around for two months. Since I will never be married [and have children], allow me and my friends to go and cry together.”
௩௭பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
38 Jephthah replied, “All right, you may go.” So she left for two months. She and her friends stayed in the hills and they cried for her because she would never be married.
௩௮அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
39 After two months, she returned to her father Jephthah, and he did to her what he had vowed. So his daughter never was married. Because of that, the Israelis now have a custom.
௩௯இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள்.
40 Every year the young Israeli women go [into the hills] for four days to remember [and cry about what happened to] the daughter of Jephthah.
௪0இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.