< 1 John 1 >

1 [I, John, am writing to you about] the one who existed before [there was anything else]. He is the one whom we [apostles] listened to [as he taught us!] We saw him! We ourselves looked at him and touched him! [He is the one who taught us] the message that [enables people to have eternal] life (OR, live [spiritually]).
ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2 Because he came here [to the earth] and we have seen him, we proclaim to you clearly that the one whom we have seen is the [one who] has always lived. He was [previously] with his Father in heaven, but he came to live among us. (aiōnios g166)
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
3 We proclaim to you the [message about Jesus], the one whom we saw and heard, in order that you may have a close relationship with us. The ones whom we have a close relationship with are God our Father and his Son Jesus Christ.
நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
4 I am writing to you about these things so that [you (will be convinced/believe]) [that they are true, and as a] result we may be completely joyful.
உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
5 The message that we heard from Christ and proclaim to you is this: God is [pure in every way. He never sins. He is like] [MET] a [brilliant] light that has no darkness at all.
தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
6 If we claim to have a close relationship with [God], but [we conduct our lives in an impure manner, that is like] living [MET] in [evil] darkness. We are lying. We are not conducting our lives according to [God’s] true message.
நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
7 But living [in a pure manner], as God is [living in a pure manner] [MET] [in every way, is like living] in God’s light. If we do that, we have a close relationship with each other. Not only that, but [God] (acquits us/removes [the guilt]) [of] all our sins because [he accepts] what his Son Jesus did for us [when his] blood [flowed from his body when he died. So we should conduct our lives] ([in a manner according to what God says is pure]).
அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8 Those who say they never behave sinfully are deceiving themselves, and refusing [to accept as] true [what God says about them].
நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
9 But God will do what he says that he will do, and what he does is [always] right. So, if we confess to him that we [have behaved] sinfully, he will forgive [us for] our sins and (will free us from/remove) [the guilt of] all our sins. [Because of that], [we should confess to him that we have behaved sinfully].
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
10 [Because God says that everyone has sinned], those who say/claim that they have never behaved sinfully talk [as though] God lies! They reject what God says [about us]!
௧0நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.

< 1 John 1 >