< Proverbs 10 >
1 proverb Solomon son: child wise to rejoice father and son: child fool grief mother his
௧சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
2 not to gain treasure wickedness and righteousness to rescue from death
௨அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
3 not be hungry LORD soul: appetite righteous and desire wicked to thrust
௩யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
4 be poor to make palm slackness and hand sharp to enrich
௪சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
5 to gather in/on/with summer son: child be prudent to sleep in/on/with harvest son: child be ashamed
௫கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
6 blessing to/for head righteous and lip wicked to cover violence
௬நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
7 memorial righteous to/for blessing and name wicked to rot
௭நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
8 wise heart to take: recieve commandment and fool(ish) lip: words to ruin
௮இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.
9 to go: walk in/on/with integrity to go: walk security and to twist way: conduct his to know
௯உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
10 to wink eye to give: give injury and fool(ish) lip: words to ruin
௧0கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
11 fountain life lip righteous and lip wicked to cover violence
௧௧நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
12 hating to rouse strife and upon all transgression to cover love
௧௨பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
13 in/on/with lips to understand to find wisdom and tribe: staff to/for back lacking heart
௧௩புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
14 wise to treasure knowledge and lip fool(ish) terror near
௧௪ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
15 substance rich town strength his terror poor poverty their
௧௫செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
16 wages righteous to/for life produce wicked to/for sin
௧௬நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
17 way to/for life to keep: careful discipline and to leave: neglect argument to go astray
௧௭புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
18 to cover hating lips deception and to come out: speak slander he/she/it fool
௧௮பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.
19 in/on/with abundance word not to cease transgression and to withhold lips his be prudent
௧௯சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
20 silver: money to choose tongue righteous heart wicked like/as little
௨0நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
21 lips righteous to pasture many and fool(ish) in/on/with lacking heart to die
௨௧நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
22 blessing LORD he/she/it to enrich and not to add toil with her
௨௨யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
23 like/as laughter to/for fool to make: do wickedness and wisdom to/for man understanding
௨௩தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
24 fear wicked he/she/it to come (in): come him and desire righteous to give: give
௨௪துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25 like/as to pass whirlwind and nothing wicked and righteous foundation forever: enduring
௨௫சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
26 like/as vinegar to/for tooth and like/as smoke to/for eye so [the] sluggish to/for to send: depart him
௨௬பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
27 fear LORD to add: again day and year wicked be short
௨௭யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
28 hope righteous joy and hope wicked to perish
௨௮நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
29 security to/for integrity way: conduct LORD and terror to/for to work evil: wickedness
௨௯யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
30 righteous to/for forever: any time not to shake and wicked not to dwell land: country/planet
௩0நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
31 lip righteous to bear fruit wisdom and tongue perversity to cut: cut
௩௧நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
32 lips righteous to know [emph?] acceptance and lip wicked perversity
௩௨நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.