< Jeremiah 47 >

1 which to be word LORD to(wards) Jeremiah [the] prophet to(wards) Philistine in/on/with before to smite Pharaoh [obj] Gaza
பார்வோன் காசாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
2 thus to say LORD behold water to ascend: rise from north and to be to/for torrent: river to overflow and to overflow land: country/planet and fullness her city and to dwell in/on/with her and to cry out [the] man and to wail all to dwell [the] land: country/planet
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து தண்ணீர் பொங்கி பிரவாகித்து தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனிதர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லோரும் அலறுவார்கள்.
3 from voice: sound stamping hoof mighty: stallion his from quaking to/for chariot his crowd wheel his not to turn father to(wards) son: child from feebleness hand
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை சோர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பார்க்காதிருப்பார்கள்.
4 upon [the] day [the] to come (in): come to/for to ruin [obj] all Philistine to/for to cut: eliminate to/for Tyre and to/for Sidon all survivor to help for to ruin LORD [obj] Philistine remnant coastland Caphtor
பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும், மீதியான சகாயரையெல்லாம் அழிக்கவும் வருகிற நாளில் இப்படியாகும்; கப்தோர் என்னும் மத்திய தரைக் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் யெகோவா பாழாக்குவார்.
5 to come (in): come bald spot to(wards) Gaza to cease Ashkelon remnant valley their till how to cut
காசா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கில் மீதியாகிய அஸ்கலோன் அழியும்; நீ எதுவரைக்கும் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்.
6 woe! sword to/for LORD till where? not to quiet to gather to(wards) razor your to rest and to silence: stationary
ஆ யெகோவாவின் பட்டயமே, எதுவரை அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.
7 how? to quiet and LORD to command to/for her to(wards) Ashkelon and to(wards) coast [the] sea there to appoint her
அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடற்கரைத் தேசத்திற்கு விரோதமாகவும் யெகோவா அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.

< Jeremiah 47 >