< Isaiah 4 >
1 Seven women shall take hold of one man in that day, saying, “We will eat our own bread, and wear our own clothing: only let us be called by your name. Take away our reproach.”
௧அந்நாளில் ஏழு பெண்கள் ஒரு ஆணைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை சாப்பிட்டு, எங்கள் சொந்த உடையை அணிவோம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
2 In that day, Adonai’s branch will be beautiful and kavod ·weighty glorious·, and the fruit of the land will be the beauty and excellent for the survivors of Israel [God prevails].
௨இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
3 It will happen, that he who is left in Zion [Mountain ridge, Marking], and he who remains in Jerusalem [City of peace], shall be called holy, even everyone who is written among the living in Jerusalem [City of peace];
௩அப்பொழுது ஆண்டவர், சீயோன் பெண்களின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
4 when 'Adonay [Lord] shall have washed away the filth of the daughters of Zion [Mountain ridge, Marking], and shall have purged the blood of Jerusalem [City of peace] from within it, by the spirit of mishpat ·justice·, and by the spirit of burning.
௪சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தங்கியிருந்து ஜீவனுக்கென்று பெயர் எழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
5 Adonai will create over the whole habitation of Mount Zion [Mountain ridge, Marking], and over her assemblies, a cloud and smoke by day, and the shining of a flaming fire by night; for over all the kavod ·weighty glory· will be a canopy.
௫அப்பொழுது யெகோவா சீயோன் மலையிலுள்ள எல்லா குடியிருப்புகளிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
6 There will be a sukkah ·temporary tent· for a shade in the daytime from the heat, and for a refuge and for a shelter from storm and from rain.
௬பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.