< Micah 3 >
1 I also said: Hear, O ye heads of Jacob, And ye leaders of the house of Israel! Is it not for you to administer justice?
௧நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது.
2 But ye hate what is good, and love what is evil; Ye tear from men their skin, Yea, their flesh from their bones;
௨ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும், அவர்களுடைய எலும்புகள்மேல் இருக்கிற சதையையும் பிடுங்கி,
3 Ye devour the flesh of my people, And strip them of their skin, And break their bones, And cut them in pieces, as for the pot, And as flesh for the caldron?
௩என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள்.
4 Then shall they cry to Jehovah, But he will not hear them; Yea, at that time will he hide his face from them, Because they have done iniquity.
௪அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் செயல்களில் பொல்லாதவர்களாக இருப்பதினால், அவர் அவர்களுக்கு மறுமொழி கொடுக்காமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
5 Thus saith Jehovah concerning the prophets, who deceive my people, Who, while they bite with their teeth, proclaim peace, But who, if one fill not their mouths, prepare war against him:
௫தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடுக்காதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தமாகி, என் மக்களை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாகக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
6 Therefore shall night come upon you, so that ye shall have no vision, And darkness, so that ye shall not divine; The sun shall go down upon the prophets, And the day shall be dark to them.
௬தரிசனம் காணமுடியாத இரவும், குறிசொல்லமுடியாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் மறைந்து, அவர்கள்மேல் பகல் மிகவும் இருளாகப்போகும்.
7 Then shall the seers be ashamed, and the diviners confounded, So that all of them shall hide their faces, Because there is no answer from God.
௭தரிசனம்பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டு, குறிசொல்லுகிறவர்கள் நாணமடைந்து, உத்திரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள்.
8 But I am full of power, even of the spirit of Jehovah; Full of uprightness and courage, To declare to Jacob his transgression, And to Israel his sin.
௮நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
9 O hear this, ye heads of the house of Jacob, And ye leaders of the house of Israel, Who abhor justice, And pervert all equity,
௯நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி,
10 Who build up Zion with blood, And Jerusalem with iniquity!
௧0சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுகிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
11 Her heads judge for reward, And her priests teach for hire, And her prophets divine for money, And yet they lean upon Jehovah, saying, “Is not Jehovah in the midst of us? No evil can come upon us.”
௧௧அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
12 Therefore because of you shall Zion be ploughed as a field, And Jerusalem become heaps of stones, And the mountain of the temple like the heights of a forest.
௧௨ஆகையால் உங்களால் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாகப்போகும், ஆலயத்தின் மலை, காட்டு மேடுகளைப்போலாகும்.