< Psalms 13 >

1 TO THE OVERSEER. A PSALM OF DAVID. Until when, O YHWH, Do You forget me forever? Until when do You hide Your face from me?
சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 Until when do I set counsels in my soul, [With] sorrow in my heart daily? Until when is my enemy exalted over me?
என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
3 Look attentively; Answer me, O YHWH, my God, Enlighten my eyes, lest I sleep in death,
என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
4 Lest my enemy say, “I overcame him,” My adversaries rejoice when I am moved.
அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
5 And I have trusted in Your kindness, My heart rejoices in Your salvation.
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
6 I sing to YHWH, For He has conferred benefits on me!
யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

< Psalms 13 >