< Numbers 17 >

1 And YHWH speaks to Moses, saying,
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
2 “Speak to the sons of Israel, and take a rod from each of them, for a father’s house, from all their princes, for the house of their fathers—twelve rods; you write the name of each on his rod,
“நீ இஸ்ரயேலரிடம் பேசி, அவர்கள் முற்பிதாக்களின் கோத்திரத் தலைவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு கோலாக, பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக்கொள். ஒவ்வொருவனுடைய கோலிலும் அவனவன் பெயரை எழுது.
3 and you write Aaron’s name on the tribe of Levi; for one rod [is] for the head of their fathers’ house.
லேவி கோத்திரத்தின் கோலில் ஆரோனின் பெயரை எழுது. ஏனெனில், ஒவ்வொரு முற்பிதாக்களின் கோத்திரத் தலைவனுக்கும் கோல் இருக்கவேண்டும்.
4 And you have placed them in the Tent of Meeting before the Testimony, where I meet with you.
அவற்றை நான் உன்னைச் சந்திக்கும் இடமான சாட்சிப்பெட்டியின் முன்னால் சபைக் கூடாரத்தில் வை.
5 And it has come to pass, the man’s rod on whom I fix flourishes, and I have caused the murmurings of the sons of Israel, which they are murmuring against you, to cease from off Me.”
அப்பொழுது நான் தெரிந்தெடுக்கும் மனிதனின் கோல் துளிர்க்கும். இவ்விதம் உனக்கெதிரான இஸ்ரயேலரின் தொடர்ச்சியான இந்த முறுமுறுப்பை நான் என்னை விட்டகற்றுவேன்” என்றார்.
6 And Moses speaks to the sons of Israel, and all their princes give to him one rod for a prince, one rod for a prince, for their fathers’ house—twelve rods; and the rod of Aaron [is] in the midst of their rods;
அப்படியே மோசே, இஸ்ரயேலரிடம் சொன்னான். அவர்களின் தலைவர்கள் தங்கள் முற்பிதாக்களின் கோத்திர தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக பன்னிரண்டு கோல்களைக் கொடுத்தார்கள். ஆரோனின் கோலும் அவற்றின் மத்தியில் இருந்தது.
7 and Moses places the rods before YHWH in the Tent of the Testimony.
மோசே அந்தக் கோல்களை சாட்சிபகரும் கூடாரத்தில் யெகோவா முன்னிலையில் வைத்தான்.
8 And it comes to pass, on the next day, that Moses goes into the Tent of the Testimony, and behold, the rod of Aaron has flourished for the house of Levi, and brings out a bud, and blossoms [with] a blossom, and produces almonds;
மறுநாள் மோசே சாட்சிபகரும் கூடாரத்திற்குள் வந்தபோது, அங்கே லேவி குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆரோனின் கோல் துளிர்த்தது மட்டுமல்லாமல், மொட்டுவிட்டுப் பூத்து, வாதுமைக் காய்களையும் கொண்டிருந்தது.
9 and Moses brings out all the rods from before YHWH to all the sons of Israel, and they look, and each takes his rod.
பின்பு மோசே யெகோவா முன்னிருந்த கோல்களையெல்லாம் எடுத்து வெளியில் இருந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் கொண்டுவந்தான். அவர்கள் அவற்றைப் பார்த்து, ஒவ்வொருவரும் தன்தன் கோல்களை எடுத்துக்கொண்டார்கள்.
10 And YHWH says to Moses, “Put back the rod of Aaron before the Testimony, for a charge, for a sign to the sons of rebellion, and you remove their murmurings from off Me, and they do not die”;
ஆனால் யெகோவா மோசேயிடம், “இக்கலகக்காரருக்கு ஒரு அடையாளமாக வைக்கப்படும்படி ஆரோனின் கோலைத் திரும்பவும் சாட்சிப்பெட்டியின் முன்னேவை. அது எனக்கு விரோதமான அவர்களின் முறுமுறுப்புக்கு ஒரு முடிவை உண்டாக்கும். அதனால் அவர்களும் சாகாதிருப்பார்கள்” என்றார்.
11 and Moses does as YHWH has commanded him; so he has done.
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
12 And the sons of Israel speak to Moses, saying, “Behold, we have expired, we have perished, all of us have perished!
அப்பொழுது இஸ்ரயேலர் மோசேயிடம், “நாங்கள் செத்தோம்! நாங்கள் தொலைந்தோம்! நாங்கள் எல்லோருமே தொலைந்தோம்!
13 Any who is at all drawing near to the Dwelling Place of YHWH dies; have we not been consumed—to expire?”
யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்கு அருகே வருபவன் எவனும் சாவான். நாங்கள் எல்லோரும் சாகப்போகிறோம்” என்றார்கள்.

< Numbers 17 >