< Job 2 >
1 And it happened [again] on a certain day, when the sons of God came to present themselves before the Lord, that the Accuser also came in the midst of them to present himself before the Lord.
இன்னொருநாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான்.
2 Then said the Lord unto the Accuser, Whence comest thou now? And the Accuser answered the Lord, and said, From roaming over the earth, and from wandering through it.
அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.
3 Then said the Lord unto the Accuser, Hast thou directed thy attention toward my servant Job: for there is none like him on the earth, a man perfect and upright, who feareth God, and escheweth evil? and he is still holding fast to his integrity, and thou hast incited me against him, to destroy him without cause.
பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார்.
4 Then answered the Accuser the Lord, and said, Skin for skin: yea, all that a man hath will he give in behalf of his life.
சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “தோலுக்குத் தோல், ஒருவன் தன் உயிருக்காகத் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் மனிதன் கொடுப்பான்.
5 But stretch only forth thy hand, and touch his bone and his flesh, and [see] whether he will not renounce thee to thy face.
ஆனாலும் நீர் உமது கரத்தை நீட்டி அவனுடைய சதையையும் எலும்புகளையும் தொடுவீரானால், அப்போது அவன் நிச்சயமாய் உம்மை உமது முகத்துக்கு நேரே சபிப்பான்” என்றான்.
6 Then said the Lord unto the Accuser, Behold, he is in thy hand: only take care of his life.
அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இப்பொழுது அவன் உன் கைகளில் இருக்கிறான்; ஆனாலும் நீ அவனுடைய உயிரை மாத்திரம் தொடாதே” என்றார்.
7 Thereupon went the Accuser forth from the presence of the Lord, and he smote Job with a sore inflammation, from the sole of his foot unto the crown of his head.
எனவே, சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று போய் யோபுவின் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை வேதனைமிக்க கொப்புளங்களால் வாதித்தான்.
8 And [Job] took himself a potsherd to scrape himself there with, while he was sitting down among the ashes.
யோபு, சாம்பலில் உட்கார்ந்து, உடைந்த ஓட்டை எடுத்து தன்னைச் சுரண்டிக் கொண்டிருந்தான்.
9 Then said his wife unto him, Art thou still holding fast to thy integrity? renounce God, and die.
அப்பொழுது அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? அதைவிட நீர் இறைவனைச் சபித்து உயிரை விடும்” என்றாள்.
10 But he said unto her, Thou speakest as one of the worthless women would speak. What? should we accept the good alone, from God, and the evil we should not accept? With all this did Job not sin with his lips.
அதற்கு யோபு, “நீ அறிவில்லாத பெண்ணைப்போல் பேசுகிறாய்; இறைவனிடம் நன்மைகளைப் பெற்ற நாம், துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதோ?” என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு தன் பேச்சினால் பாவம் செய்யவில்லை.
11 When now the three friends of Job had heard of all this evil that was come over him, they came every one from his own place, Eliphaz the Themanite, and Bildad the Shuchite, and Zophar the Na'amthite; and they met together to come to condole with him and to comfort him.
யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள்.
12 And when they lifted up their eyes afar off, and they recognised him not, they lifted up their voice, and wept; and they rent every one his robe, and strewed dust upon their heads toward heaven.
அவர்கள் தூரத்திலிருந்து யோபுவைக் கண்டபோது, அவர்களால் அவனை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவர்கள் கதறி அழத்தொடங்கி தங்கள் மேலங்கிகளைக் கிழித்து, தங்கள் தலைகளில் தூசியை வாரியிறைத்தார்கள்.
13 They likewise sat down with him on the ground seven days and seven nights; but no one spoke a word unto him; for they saw that his pain was very great.
அவனுடைய வேதனையின் கொடுமையை அவர்கள் கண்டதால், ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அவனுடன் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவனும் அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.