< Psalms 54 >
1 Save me, O God, by your name, and judge me by your strength.
௧தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
2 Hear my prayer, O God; give ear to the words of my mouth.
௨தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
3 For strangers are risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. (Selah)
௩அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
4 Behold, God is mine helper: the Lord is with them that uphold my soul.
௪இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
5 He shall reward evil unto mine enemies: cut them off in your truth.
௫அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
6 I will freely sacrifice unto you: I will praise your name, O LORD; for it is good.
௬உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
7 For he has delivered me out of all trouble: and mine eye has seen his desire upon mine enemies.
௭அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.