< 2 Kings 12 >
1 In the seuenth yere of Iehu Iehoash began to reigne, and reigned fourty yeres in Ierusalem, and his mothers name was Zibiah of Beer-sheba.
௧யெகூவின் ஏழாம் வருட ஆட்சியில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள்.
2 And Iehoash did that which was good in the sight of the Lord all his time that Iehoiada the Priest taught him.
௨ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரைசெய்த நாட்களெல்லாம் அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3 But the hie places were not taken away: for the people offred yet and burnt incense in the hie places.
௩மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
4 And Iehoash sayde to the Priestes, All the siluer of dedicate things that bee brought to the house of the Lord, that is, the money of them that are vnder the count, the money that euery man is set at, and all the money that one offereth willingly, and bringeth into the house of the Lord,
௪யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுகிற பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களாகிய எல்லாப் பணத்தையும், மக்களின் வரிப்பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரும்படி அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
5 Let the Priestes take it to them, euery man of his acquaintance: and they shall repaire the broken places of the house, wheresoeuer any decay is founde.
௫ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது இருக்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
6 Yet in the three and twentieth yeere of King Iehoash the Priestes had not mended that which was decayed in the Temple.
௬ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருடம்வரை ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபார்க்காததால்,
7 Then King Iehoash called for Iehoiada the Priest, and the other Priestes, and sayd vnto them, Why repaire yee not the ruines of the Temple? nowe therefore receiue no more money of your acquaintance, except yee deliuer it to repaire the ruines of the Temple.
௭ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.
8 So the Priestes consented to receiue no more money of the people, neither to repaire the decayed places of the Temple.
௮அப்பொழுது ஆசாரியர்கள் மக்களின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபார்க்காமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.
9 Then Iehoiada the Priest tooke a chest and bored an hole in the lid of it, and set it beside the altar, on the right side, as euery man commeth into the Temple of the Lord. And the Priestes that kept the doore, put therein all the money that was brought into the house of the Lord.
௯ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தின் அருகில் யெகோவாவுடைய ஆலயத்தில் மக்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
10 And when they sawe there was much money in the chest, the Kinges Secretarie came vp and the hie Priest, and put it vp after that they had tolde the money that was found in the house of the Lord,
௧0பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனும் வந்து: யெகோவாவுடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி பைகளிலேபோட்டுக் கட்டி,
11 And they gaue the money made readie into the handes of them, that vndertooke the worke, and that had the ouersight of the house of the Lord; and they payed it out to the carpenters and builders that wrought vpon the house of the Lord,
௧௧எண்ணின பணத்தைக் யெகோவாவுடைய ஆலயத்திலே கண்காணிப்பாளர்களின் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பிகளுக்கும்,
12 And to the masons and hewers of stone, and to bye timber and hewed stone, to repayre that was decayed in the house of the Lord, and for all that which was layed out for the reparation of the Temple.
௧௨கொல்லருக்கும், கல்தச்சருக்கும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குத் தேவையான எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
13 Howbeit there was not made for the house of the Lord bowles of siluer, instruments of musicke, basons, trumpets, nor any vessels of golde, or vessels of siluer of the money that was brought into the house of the Lord.
௧௩யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், வாத்தியக்கருவிகளும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படாமல்,
14 But they gaue it to the workemen, which repayred therewith the house of the Lord.
௧௪யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
15 Moreouer, they reckoned not with the men, into whose handes they deliuered that money to be bestowed on workemen: for they dealt faithfully.
௧௫வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படி, பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் கையிலே கணக்குக் கேட்காமலிருந்தார்கள்; அவர்கள் அதை உண்மையாகச் செய்தார்கள்.
16 The money of the trespasse offring and the money of ye sinne offrings was not brought into the house of the Lord: for it was the Priests.
௧௬குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் யெகோவாவுடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியர்களைச் சேர்ந்தது.
17 Then came vp Hazael King of Aram, and fought against Gath and tooke it, and Hazael set his face to goe vp to Ierusalem.
௧௭அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் போர்செய்து அதைப் பிடித்தான்; அதன் பின்பு எருசலேமுக்கு விரோதமாகப்போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
18 And Iehoash King of Iudah tooke all the halowed thinges that Iehoshaphat, and Iehoram, and Ahaziah his fathers Kings of Iudah had dedicated, and that he himselfe had dedicated, and all the golde that was found in the treasures of the house of the Lord and in the Kings house, and sent it to Hazael King of Aram, and he departed from Ierusalem.
௧௮அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் முன்னோர்களாகிய யோசபாத், யோராம், அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்செய்துவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் செய்துவைத்ததையும், யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலுமுள்ள பொக்கிஷங்களில் கிடைத்த பொன் எல்லாவற்றையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமைவிட்டுத் திரும்பிப்போனான்.
19 Concerning the rest of the acts of Ioash and all that he did, are they not written in the booke of the Chronicles of the Kings of Iudah?
௧௯யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
20 And his seruants arose and wrought treason, and slewe Ioash in the house of Millo, when he came downe to Silla:
௨0யோவாசின் ஊழியக்காரர்கள் எழும்பி சதிசெய்து, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
21 Euen Iozachar the sonne of Shimeath, and Iehozabad the sonne of Shomer his seruants smote him, and he dyed: and they buried him with his fathers in the citie of Dauid. And Amaziah his sonne reigned in his stead.
௨௧சிமியாதின் மகனாகிய யோசகார், சோமேரின் மகனாகிய யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர்கள் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.