< 1 Chronicles 8 >
1 Beniamin also begate Bela his eldest sonne, Ashbel the second, and Aharah the third,
௧பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
2 Nohah the fourth, and Rapha the fift.
௨நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
3 And the sonnes of Bela were Addar, and Gera, and Abihud,
௩பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
4 And Abishua, and Naaman and Ahoah,
௪அபிசுவா, நாகாமான், அகோவா,
5 And Gera, and Shephuphan, and Huram.
௫கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
6 And these are the sonnes of Ehud: these were the chiefe fathers of those that inhabited Geba: and they were caryed away captiues to Monahath,
௬கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
7 And Naaman, and Ahiah, and Gera, he caryed them away captiues: and he begate Vzza, and Ahihud.
௭கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
8 And Shaharaim begate certaine in the coutrey of Moab, after he had sent away Hushim and Baara his wiues.
௮அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
9 He begate, I say, of Hodesh his wife, Iobab and Zibia, and Mesha, and Malcham,
௯தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
10 And Ieuz and Shachia and Mirma: these were his sonnes, and chiefe fathers.
௧0எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
11 And of Hushim he begat Ahitub and Elpaal.
௧௧ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12 And the sonnes of Elpaal were Eber, and Misham and Shamed (which built Ono, and Lod, and the villages thereof)
௧௨எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
13 And Beriah and Shema (which were the chiefe fathers among the inhabitants of Aialon: they draue away the inhabitants of Gath)
௧௩பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
14 And Ahio, Shashak and Ierimoth,
௧௪அகியோ, சாஷாக், எரேமோத்,
15 And Sebadiah, and Arad, and Ader,
௧௫செபதியா, ஆராத், ஆதேர்,
16 And Michael, and Ispah, and Ioha, the sonnes of Beriah,
௧௬மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
17 And Zebadiah, and Meshullam, and Hizki, and Heber,
௧௭செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18 And Ishmerai and Izliah, and Iobab, the sonnes of Elpaal,
௧௮இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
19 Iakim also, and Zichri, and Sabdi,
௧௯யாக்கிம், சிக்ரி, சப்தி,
20 And Elienai, and Zillethai, and Eliel,
௨0எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
21 And Adaiah, and Beraiah, and Shimrah the sonnes of Shimei,
௨௧அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
22 And Ishpan, and Eber, and Eliel,
௨௨இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23 And Abdon, and Zichri, and Hanan,
௨௩அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 And Hananiah, and Elam, and Antothiiah,
௨௪அனனியா, ஏலாம், அந்தோதியா,
25 Iphedeiah and Penuel ye sonnes of Shashak,
௨௫இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
26 And Shamsherai, and Shehariah, and Athaliah,
௨௬சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27 And Iaareshiah, and Eliah, and Zichri, the sonnes of Ieroham.
௨௭யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
28 These were the chiefe fathers according to their generations, euen princes, which dwelt in Ierusalem.
௨௮இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29 And at Gibeon dwelt the father of Gibeon, and the name of his wife was Maachah.
௨௯கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
30 And his eldest sonne was Abdon, then Zur, and Kish, and Baal, and Nadab,
௩0அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
31 And Gidor, and Ahio, and Zacher.
௩௧கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
32 And Mikloth begate Shimeah: these also dwelt with their brethren in Ierusalem, euen by their brethren.
௩௨மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
33 And Ner begate Kish, and Kish begat Saul, and Saul begate Ionathan, and Malchishua, and Abinadab, and Eshbaal.
௩௩நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
34 And the sonne of Ionathan was Merib-baal, and Merib-baal begate Micah.
௩௪யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
35 And the sonnes of Micah were Pithon, and Melech, and Tarea, and Ahaz.
௩௫மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
36 And Ahaz begate Iehoadah, and Iehoadah begate Alemeth, and Azmaueth, and Zimri, and Zimri begate Moza,
௩௬ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
37 And Moza begate Bineah, whose sonne was Raphah, and his sonne Eleasah, and his sonne Azel.
௩௭மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
38 And Azel had sixe sonnes, whose names are these, Azrikam, Bocheru and Ishmael, and Sheariah, and Obadiah, and Hanan: all these were the sonnes of Azel.
௩௮ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
39 And the sonnes of Eshek his brother were Vlam his eldest sonne, Iehush the second, and Eliphelet the third.
௩௯அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
40 And the sonnes of Vlam were valiant men of warre which shot with the bow, and had many sonnes and nephewes, an hundreth and fiftie: all these were of the sonnes of Beniamin.
௪0ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.