< Deuteronomy 14 >

1 You are the children of the Lord your God. Don't mutilate yourselves or shave your forehead like pagans do when they mourn the dead,
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பிள்ளைகள். ஆகவே நீங்கள் இறந்தவர்களுக்காக உங்களை வெட்டிக்கொள்ளவோ, தலைகளின் முன்பக்கத்தைச் சிரைக்கவோவேண்டாம்.
2 because you are a holy people who belong to the Lord your God. The Lord chose you as his special people out of all the nations on earth.
நீங்களே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்தமான மக்கள். அவர் பூமியின் மீதுள்ள எல்லா மக்களிலும் உங்களையே தமக்கு அருமையான உரிமைச்சொத்தாய் இருக்கும்படி தெரிந்தெடுத்திருக்கிறார்.
3 You must not eat anything repulsive.
அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்.
4 These are the animals that you are allowed to eat: cattle, sheep, goats,
நீங்கள் சாப்பிடக்கூடிய மிருகங்களாவன: மாடு, செம்மறியாடு, வெள்ளாடு,
5 deer, gazelles, wild goats, antelopes, and mountain sheep.
மான், வெளிமான், கலைமான், காட்டாடு, புள்ளிமான், சருகுமான், மலையாடு ஆகியன.
6 You can eat any animal that both has a divided hoof and also chews the cud.
இரண்டாக விரிந்த குளம்புடையதும், இரையை அசைப்போடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.
7 But you are not allowed to eat those that either chew the cud or have a divided hoof. This includes: camels, rabbits, and rock hyraxes. Even though they chew the cud, they don't have a divided hoof. You must treat them as unclean.
சில மிருகங்கள் இரையை அசைப்போடுகிறதாய் மட்டும் இருக்கின்றன, சில மிருகங்கள் குளம்புகள் விரிந்ததாய் மட்டும் இருக்கின்றன. இவற்றில் ஒட்டகம், முயல், குழிமுயல் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை இரையை அசைபோட்டாலும் அவற்றுக்குப் விரிந்த குளம்புகள் இல்லை. ஆகையால் சம்பிரதாய முறைப்படி அவை உங்களுக்கு அசுத்தமானவை.
8 The same applies to the pig. Even though it has a divided hoof, it does not chew the cud. So you must treat it as unclean. You must not eat its meat or touch its dead body.
பன்றியும் அசுத்தமானது. ஏனெனில், அதற்கு விரிந்த குளம்பு இருந்தாலும், அது இரையை அசைப்போடுகிறதில்லை. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ, அவற்றின் செத்த உடலை தொடவோகூடாது.
9 When it comes to creatures that live in the water, you are allowed to eat anything that has fins and scales.
நீரில் வாழும் உயிரினங்களில் துடுப்புகளும், செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.
10 But you must not eat anything that does not have fins and scales. You must treat them as unclean.
துடுப்புகளும் செதில்களும் இல்லாத வேறொன்றையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமானவை.
11 You are allowed to eat any clean bird.
சுத்தமான எந்தப் பறவையையும்
12 But you must not eat the following: eagle, griffon vulture, bearded vulture,
நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடக்கூடாத பறவைகளாவன: கழுகு, கருடன், கடலூராஞ்சி,
13 buzzard, kites, any kind of falcon,
செம்பருந்து, கரும்பருந்து, எல்லாவித வல்லூறுகள்,
14 any member of the crow family,
சகலவித அண்டங்காக்கைகள்,
15 tawny owl, long-eared owl, gulls, any kind of hawk,
தீக்கோழி, ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள்,
16 little owl, eagle owl, barn owl,
சிறு ஆந்தை, பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை,
17 desert owl, Egyptian vulture, fish owl,
பாலைவன ஆந்தை, கூழக்கடா, நீர்க்காகம்,
18 storks, any kind of heron, hoopoe, or bats.
கொக்கு, எல்லாவித நாரை, புழுக்கொத்தி, வவ்வால் ஆகியனவாகும்.
19 All insects that fly are unclean to you; you must not eat them.
பறக்கும் பூச்சி வகைகளில் யாவும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைச் சாப்பிடவேண்டாம்.
20 But you are allowed to eat any clean animal that has wings.
சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம்.
21 You must not eat any animal that dies. You can give it to a foreigner in your town, and they can eat it, or you can sell it to a foreigner. You, however, are a holy people who belong to the Lord your God. Don't cook a young goat in its mother's milk.
ஏற்கெனவே இறந்து கிடக்கிறதாக நீங்கள் காணும் எதையும் சாப்பிடவேண்டாம். உங்கள் பட்டணங்களில் ஒன்றில் வாழும் அந்நியனுக்கு அவற்றைக்கொடுங்கள், அவன் சாப்பிடட்டும் அல்லது வேறு நாட்டவனுக்கு விற்றுவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள் நீங்களே. வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்கவேண்டாம்.
22 Make sure you pay a tithe of every crop grown each year in your fields.
ஒவ்வொரு வருடமும் உங்கள் வயல்நிலம் விளைவிக்கும் எல்லாவற்றிலும் இருந்து பத்திலொருபாகத்தைப் புறம்பாக்கிவைக்கக் கவனமாயிருங்கள்.
23 You are to eat a tenth of your grain, new wine, and olive oil, and the firstborn of your herds and flocks, in the presence of the Lord your God at the place he will choose to live with you, so that you will learn to always respect the Lord your God.
உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கையும் மாட்டு மந்தை, ஆட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றையும், உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும் வசிப்பிடமாக தெரிந்துகொள்ளும் இடத்தில் அவருக்கு முன்பாக சாப்பிடுங்கள். அப்பொழுது நீங்கள் எப்பொழுதும் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பயபக்தியாயிருக்கக் கற்றுக்கொள்வீர்கள்.
24 However, if it's too far to carry all the tithe that the Lord your God has blessed you with, because the place where the Lord your God will choose to live with you is too distant,
யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் தூரமாய் இருக்கலாம். அவ்வாறு தூரமாய் இருப்பதினால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் பத்திலொரு பங்கைச் சுமந்துகொண்டு அங்குபோக உங்களால் முடியாதிருக்கலாம்.
25 then you can exchange it for money, take the money with you and go to the place the Lord your God will choose.
அப்பொழுது உங்கள் பத்திலொரு பங்கை வெள்ளிக்கு பதிலீடுசெய்து, அந்த வெள்ளியை உங்களுடன் எடுத்துக்கொண்டு உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்துக்குப் போங்கள்.
26 Then you can spend the money on anything you like—cattle, sheep, wine, alcoholic drink, or anything else you want. Then you can have a feast there in the presence of the Lord your God and celebrate with your family.
அங்கேபோய், அந்த வெள்ளிக்கு செம்மறியாடுகளையோ மாடுகளையோ திராட்சை இரசத்தையோ அல்லது மதுபானத்தையோ நீங்கள் விரும்பும் எதையும் வாங்குங்கள். பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீங்களும், உங்கள் வீட்டாரும் அவற்றைச் சாப்பிட்டுக் களிகூருங்கள்.
27 Don't forget to take care of the Levites in your town, because they don't have any share in the allotment of land.
ஆனாலும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியரை மறவாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொந்தமாக நிலப்பங்குகளோ உரிமைச்சொத்தோ இல்லை.
28 At the end of every third year, collect a tenth of all your produce for that year and store it in your town.
ஒவ்வொரு மூன்று வருட முடிவிலும் அந்த வருட விளைச்சலின் பத்திலொருபங்கைக் கொண்டுவந்து, உங்கள் பட்டணங்களில் உள்ள களஞ்சியங்களில் சேர்த்துவையுங்கள்.
29 This way the Levites (who don't have any share in the allotment of land), the foreigners, the orphans, and the widows in your town will be provided with what they need. The Lord your God will bless you in everything you do.
இவற்றில், தங்களுக்குச் சொந்தமான நிலப்பங்கும், உரிமைச்சொத்தும் இல்லாமல் உங்கள் பட்டணத்தில் வாழும் லேவியரும், அந்நியரும், தகப்பன் இல்லாதவர்களும், விதவைகளும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதிப்பார்.

< Deuteronomy 14 >