< Nehemiah 7 >
1 Now after the wall was built, and I had set up the doors, and numbered the porters and singing men, and Levites:
௧மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
2 I commanded Hanani my brother, and Hananias ruler of the house of Jerusalem, (for he seemed as a sincere man, and one that feared God above the rest, )
௨நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
3 And I said to them: Let not the gates of Jerusalem be opened till the sun be hot. And while they were yet standing by, the gates were shut, and barred: and I set watchmen of the inhabitants of Jerusalem, every one by their courses, and every mall over against his house.
௩அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
4 And the city was very wide and great, and the people few in the midst thereof, and the houses were not built.
௪பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
5 But God had put in my heart, and I assembled the princes and magistrates, and common people, to number them: and I found a book of the number of them who came up at first, and therein it was found written:
௫அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
6 These are the children of the province, who came up from the captivity of them that had been carried away, whom Nabuchodonosor the king of Babylon had carried away, and who returned into Judea, every one into his own city.
௬பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
7 Who came with Zorobabel, Josue, Nehemias, Azarias, Raamias, Nahamani, Mardochai, Belsam, Mespharath, Begoia, Nahum, Baana. The number of the men of the people of Israel:
௭எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
8 The children of Pharos, two thousand one hundred seventy-two.
௮பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
9 The children of Sephatia, three hundred seventy-two.
௯செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
10 The children of Area, six hundred fifty-two.
௧0ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
11 The children of Phahath Moab of the children of Josue and Joab, two thousand eight hundred eighteen.
௧௧யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
12 The children of Elam, one thousand two hundred fifty-four.
௧௨ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
13 The children of Zethua, eight hundred forty-five.
௧௩சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
14 The children of Zachai, seven hundred sixty.
௧௪சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
15 The children of Bannui, six hundred forty-eight.
௧௫பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
16 The children of Bebai, six hundred twenty-eight.
௧௬பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
17 The children of Azgad, two thousand three hundred twenty-two.
௧௭அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
18 The children of Adonicam, six hundred sixty-seven.
௧௮அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
19 The children of Beguai, two thousand sixty-seven.
௧௯பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
20 The children of Adin, six hundred fifty-five.
௨0ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
21 The children of Ater, children of Hezechias, ninety-eight.
௨௧எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
22 The children of Hasem, three hundred twenty-eight.
௨௨ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
23 The children of Besai, three hundred twenty-four.
௨௩பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
24 The children of Hareph, a hundred and twelve.
௨௪ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
25 The children of Gabaon, ninety-five.
௨௫கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
26 The children of Bethlehem, and Netupha, a hundred eighty-eight.
௨௬பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
27 The men of Anathoth, a hundred twenty-eight.
௨௭ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
28 The men of Bethazmoth, forty-two.
௨௮பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
29 The men of Cariathiarim, Cephira, and Beroth, seven hundred forty-three.
௨௯கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
30 The men of Rama and Geba, six hundred twenty-one.
௩0ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
31 The men of Machmas, a hundred twenty-two.
௩௧மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
32 The men of Bethel and Hai, a hundred twenty-three.
௩௨பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
33 The men of the other Nebo, fifty-two.
௩௩வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
34 The men of the other Elam, one thousand two hundred fifty-four.
௩௪மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
35 The children of Harem, three hundred and twenty.
௩௫ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
36 The children of Jericho, three hundred forty-five.
௩௬எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
37 The children of Led, of Hadid and One, seven hundred twenty-one.
௩௭லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
38 The children of Senaa, three thousand nine hundred thirty.
௩௮செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
39 The priests: the children of Idaia in the house of Josue, nine hundred and seventy-three.
௩௯ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
40 The children of Emmer, one thousand fifty-two.
௪0இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
41 The children of Phashur, one thousand two hundred forty-seven.
௪௧பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
42 The children of Arem, one thousand and seventeen. The Levites:
௪௨ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
43 The children of Josue and Cedmihel, the sons
௪௩லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
44 Of Oduia, seventy-four. The singing men:
௪௪பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
45 The children of Asaph, a hundred forty-eight.
௪௫வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
46 The porters: the children of Sellum, the children of Ater, the children of Telmon, the children of Accub, the children of Hatita, the children of Sobai: a hundred thirty-eight.
௪௬ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
47 The Nathinites: the children of Soha, the children of Hasupha, the children of Tebbaoth,
௪௭கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
48 The children of Ceros, the children of Siaa, the children of Phadon, the children of Lebana, the children of Hagaba, the children of Selmai,
௪௮லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
49 The children of Hanan, the children of Geddel, the children of Gaher,
௪௯ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
50 The children of Raaia, the children of Rasin, the children of Necoda,
௫0ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
51 The children of Gezem, the children of Asa, the children of Phasea,
௫௧காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
52 The children of Besai, the children of Munim, the children of Nephussim,
௫௨பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
53 The children of Bacbuc, the children of Hacupha, the children of Harhur,
௫௩பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
54 The children of Besloth, the children of Mahida, the children of Harsa,
௫௪பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
55 The children of Bercos, the children of Sisara, the children of Thema,
௫௫பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
56 The children of Nasia, the children of Hatipha,
௫௬நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
57 The children of the servants of Solomon, the children of Sothai, the children of Sophereth, the children of Pharida,
௫௭சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
58 The children of Jahala, the children of Darcon, the children of Jeddel,
௫௮யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
59 The children of Saphatia, the children of Hatil, the children of Phochereth, who was born of Sabaim, the son of Amon.
௫௯செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
60 All the Nathinites, and the children of the servants of Solomon, three hundred ninety-two.
௬0ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
61 And these are they that came up from Telmela, Thelharsa, Cherub, Addon, and Emmer: and could not shew the house of their fathers, nor their seed, whether they were of Israel.
௬௧தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
62 The children of Dalaia, the children of Tobia, the children of Necoda, six hundred forty-two.
௬௨தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
63 And of the priests, the children of Habia, the children of Accos, the children of Berzellai, who took a wife of the daughters of Berzellai the Galaadite, and he was called by their name.
௬௩ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
64 These sought their writing in the record, and found it not: and they were cast out of the priesthood.
௬௪இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
65 And Athersatha said to them, that they should not eat of the holies of holies, until there stood up a priest learned and skillful.
௬௫ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
66 All the multitude as it were one man, forty-two thousand three hundred sixty,
௬௬சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
67 Beside their menservants and womenservants, who were seven thousand three hundred thirty-seven: and among them singing men, and singing women, two hundred forty-five.
௬௭அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
68 Their horses, seven hundred thirty-six: their mules two hundred forty-five:
௬௮அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
69 Their camels, four hundred thirty-five, their asses, six thousand seven hundred and twenty.
௬௯ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
70 And some of the heads of the families gave unto the work. Athersatha gave into the treasure a thousand drama of gold, fifty bowls, and five hundred and thirty garments for priests.
௭0வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
71 And some of the heads of families gave to the treasure of the work, twenty thousand drama of gold, and two thousand two hundred pounds of silver.
௭௧வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
72 And that which the rest of the people gave, was twenty thousand drama of gold, and two thousand pounds of silver, and sixty-seven garments for priests.
௭௨மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
73 And the priests, and the Levites, and the porters, and the singing men, and the rest of the common people, and the Nathinites, and all Israel dwelt in their cities.
௭௩ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.