< Job 24 >

1 The times are not hidden from the Almighty; even those who know him, do not know his days.
“எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்? அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக வீணாய்க் காத்திருப்பதும் ஏன்?
2 Some have crossed the boundaries, plundered the flocks, and given them pasture.
மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்; அவர்கள் திருடிய மந்தைகளையே அவர்கள் மேய்க்கிறார்கள்.
3 They have driven away the donkey of orphans, and have taken the cow from the widow as collateral.
அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்; விதவைகளின் எருதை ஈட்டுப் பொருளாக வாங்குகிறார்கள்.
4 They have undermined the way of the poor, and have pressed together the meek of the earth.
அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்; அவர்களுடைய வன்முறையால் நாட்டிலுள்ள ஏழைகளை ஒழியப்பண்ணுகிறார்கள்.
5 Others, like wild asses in the desert, go forth to their work; by watching for prey, they obtain bread for their children.
காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல், ஏழைகள் உணவு தேடி அலைகிறார்கள்; அவர்கள் பிள்ளைகளுக்குப் பாழ்நிலம் உணவளிக்கின்றது.
6 They reap a field that is not their own, and they harvest a vineyard that they have taken by force.
வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்; கொடியவர்களின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்டதை பொறுக்குகிறார்கள்.
7 They send men away naked, having taken the clothing of those who have no covering in the cold;
அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்; குளிரில் மூடிக்கொள்வதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை.
8 these are wet with the mountain rain, and, having no covering, they embrace the rocks.
மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்; தங்குவதற்கு இடமின்றி பாறைகளில் மறைகிறார்கள்.
9 They have used violence to deprive orphans, and they have robbed the poor common people.
தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது; ஏழையின் குழந்தை கடனுக்காகக் கைப்பற்றப்படுகிறது.
10 From the naked and those who do not have enough clothing, and from the hungry, they have taken away sheaves of grain.
ஏழைகள் உடையின்றி நடந்து, அரிக்கட்டுகளைச் சுமந்து, பசியாகவே இருக்கிறார்கள்.
11 They take their midday rest among the stockpiles of those who, though they have trodden the winepresses, suffer thirst.
அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்; ஆலைகளில் திராட்சை இரசம் பிழிகிறார்கள்.
12 In the cities, they caused the men to groan and the spirit of the wounded to cry out, and so God does not allow this to go unpunished.
சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது, காயப்பட்டவர்கள் உதவிவேண்டி கதறி அழுகிறார்கள், ஆனாலும் இறைவன் அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
13 They have been rebellious against the light; they have not known his ways, nor have they returned by his paths.
“கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்; அவர்கள் ஒளியின் வழிகளை அறியாமலும், அதின் பாதைகளில் நிலைத்திராமலும் இருக்கிறார்கள்.
14 The killer of men rises at first light; he executes the destitute and the poor, but, in truth, he is like a thief in the night.
பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து, ஏழையையும் தேவை மிகுந்தவர்களையும் கொன்று, இரவில் திருடனைப்போல் திரிகிறான்.
15 The eye of the adulterer waits for darkness, saying, “No eye will see me,” and he covers his face.
விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன; அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி, தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான்.
16 He passes through houses in the nighttime, just as they had agreed among themselves in the daytime; and they are ignorant of the light.
பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவில் கன்னமிடுகிறார்கள்; வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.
17 If sunrise should suddenly appear, it is treated by them like the shadow of death; and they walk in darkness, as if in light.
அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது; இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.
18 He is nimble on the surface of water. His place on land is to be accursed. May he not walk by way of the vineyards.
“அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்; நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால், அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.
19 May he cross from the snowy waters to excessive heat, and his sin, all the way to hell. (Sheol h7585)
வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol h7585)
20 Let mercy forget him. His charm is worms. Let him not be remembered, but instead be broken like an unfruitful tree.
அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும், புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும். தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை, மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள்.
21 For he has fed on the barren, who does not bear fruit, and he has not done good to the widow.
அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள், விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை.
22 He has pulled down the strong by his strength, and, when he stands up, he will not have trust in his life.
இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்; அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை.
23 God has given him a place for repentance, and he abuses it with arrogance, but his eyes are upon his ways.
இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும், அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
24 They are lifted up for a little while, but they will not continue, and they will be brought low, just like all things, and they will be taken away, and, like the tops of the ears of grain, they will be crushed.
சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்; தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள்.
25 But, if this is not so, who is able to prove to me that I have lied and to place my words before God?
“இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து, என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?”

< Job 24 >