< Haggai 1 >

1 In the second year of king Darius, in the sixth month, on the first day of the month, the word of the Lord came, by the hand of Haggai the prophet, to Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and to Jesus the son of Jehozadak, the high priest, saying:
பெர்சிய அரசன் தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம், ஆறாம் மாதம் முதலாம் நாள், இறைவாக்கினன் ஆகாய் மூலம் இறைவாக்கு வந்தது. அது செயல்தியேலின் மகன் யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும், யோசதாக்கின் மகனான தலைமை ஆசாரியன் யோசுவாவுக்கும் வந்த யெகோவாவின் வார்த்தை:
2 Thus says the Lord of hosts, saying: This people claims that the time has not yet arrived for building the house of the Lord.
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “யெகோவாவின் ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பும் காலம் இன்னும் வரவில்லை” என இந்த மக்கள் சொல்கிறார்கள்.
3 But the word of the Lord came by the hand of Haggai the prophet, saying:
அப்பொழுது இறைவாக்கினன் ஆகாய் மூலம் யெகோவாவின் வார்த்தை வந்தது.
4 Is it time for you to dwell in paneled houses, while this house is deserted?
“என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கையில் நீங்கள் மட்டும் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”
5 And now, thus says the Lord of hosts: Set your hearts upon your ways.
இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்களுக்கு நடப்பதைப் பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
6 You sowed much and have brought in little. You consumed and have not been satisfied. You drank and have not been inebriated. You covered yourselves and have not been warmed. And whoever gathered wages, has put them in a bag with holes.
நீங்கள் அதிகமாய் விதைத்திருக்கிறீர்கள், மிகக் கொஞ்சமாய் அறுவடை செய்கிறீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் குடிக்கிறீர்கள், ஒருபோதும் உங்கள் தாகமோ தீருவதில்லை. உடைகளை உடுத்திக்கொள்கிறீர்கள், என்றாலும் குளிர் உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பைகளிலேயே போடுகிறீர்கள்.”
7 Thus says the Lord of hosts: Set your hearts upon your ways.
சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்கள் நடத்தையைப்பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
8 Ascend to the mountain, bring wood and build the house, and it shall be acceptable to me, and I shall be glorified, says the Lord.
மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிவந்து ஆலயத்தை கட்டுங்கள், அதில் நான் மகிழ்ந்து, நான் கனம்பண்ணப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
9 You have looked for more, and behold, it became less, and you brought it home, and I blew it away. What is the cause of this, says the Lord of hosts? It is because my house is desolate, yet you have hurried, each one to his own house.
நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் அது மிகக் கொஞ்சமாக மாறிற்று. நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
10 Because of this, the heavens over you have been prohibited from giving dew, and the earth has been prohibited from giving her sprouts.
ஆகவே உங்களின் அலட்சியத்தால் வானம் பனியைப் பெய்யாமலும், நிலம் விளைச்சலை கொடுக்காமலும் போயிற்று.
11 And I called a drought over the land, and over the mountains, and over the wheat, and over the wine, and over the oil, and whatever the soil would bring forth, and over men, and over beasts of burden, and over all the labor of hands.
நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன்.
12 And Zerubbabel the son of Shealtiel, and Jesus the son of Jehozadak, the high priest, and all the remnant of the people heeded the voice of the Lord their God, and the words of Haggai the prophet, just as the Lord their God sent him to them. And the people were fearful before the face of the Lord.
அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவா இறைவாக்கினன் ஆகாயை அனுப்பியதால், அவனுடைய செய்திகளுக்கும் கீழ்ப்படிந்தார்கள். மக்களோ யெகோவாவுக்குப் பயந்தார்கள்.
13 And Haggai, a messenger of the Lord among messengers of the Lord, spoke to the people, saying: the Lord says, “I am with you.”
அப்பொழுது யெகோவாவின் தூதுவனாகிய ஆகாய், யெகோவாவின் இந்தச் செய்தியை மக்களுக்குக் கொடுத்து, “நான் உங்களுடன் இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.
14 And the Lord stirred the spirit of Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and the spirit of Jesus the son of Jehozadak, the high priest, and the spirit of the remainder of all the people. And they entered and performed work in the house of the Lord of hosts their God.
இவ்வாறு யெகோவா யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலின் ஆவியையும், யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவின் ஆவியையும், மக்களில் மீதியானோர் அனைவரின் ஆவியையும் தூண்டினார். அவர்கள் எல்லோரும், தங்கள் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.
15 On the twenty-fourth day of the month, in the sixth month, in the second year of king Darius, they began.
இது ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள் நிகழ்ந்தது. இது தரியு அரசனின் ஆட்சியின் இரண்டாம் வருடம்,

< Haggai 1 >