< Job 5 >
1 “Call out if you please, but who will answer? To which of the holy ones will you turn?
௧“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
2 For resentment kills a fool, and envy slays the simple.
௨கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
3 I have seen a fool taking root, but suddenly his house was cursed.
௩மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
4 His sons are far from safety, crushed in court without a defender.
௪அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
5 The hungry consume his harvest, taking it even from the thorns, and the thirsty pant after his wealth.
௫பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
6 For distress does not spring from the dust, and trouble does not sprout from the ground.
௬தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
7 Yet man is born to trouble as surely as sparks fly upward.
௭தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
8 However, if I were you, I would appeal to God and lay my cause before Him—
௮ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
9 the One who does great and unsearchable things, wonders without number.
௯ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
10 He gives rain to the earth and sends water upon the fields.
௧0தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
11 He sets the lowly on high, so that mourners are lifted to safety.
௧௧அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
12 He thwarts the schemes of the crafty, so that their hands find no success.
௧௨தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
13 He catches the wise in their craftiness, and sweeps away the plans of the cunning.
௧௩அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
14 They encounter darkness by day and grope at noon as in the night.
௧௪அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
15 He saves the needy from the sword in their mouth and from the clutches of the powerful.
௧௫ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
16 So the poor have hope, and injustice shuts its mouth.
௧௬அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
17 Blessed indeed is the man whom God corrects; so do not despise the discipline of the Almighty.
௧௭இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
18 For He wounds, but He also binds; He strikes, but His hands also heal.
௧௮அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
19 He will rescue you from six calamities; no harm will touch you in seven.
௧௯ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
20 In famine He will redeem you from death, and in battle from the stroke of the sword.
௨0பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
21 You will be hidden from the scourge of the tongue, and will not fear havoc when it comes.
௨௧நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
22 You will laugh at destruction and famine, and need not fear the beasts of the earth.
௨௨அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
23 For you will have a covenant with the stones of the field, and the wild animals will be at peace with you.
௨௩வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
24 You will know that your tent is secure, and find nothing amiss when inspecting your home.
௨௪உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
25 You will know that your offspring will be many, your descendants like the grass of the earth.
௨௫உம்முடைய சந்ததி பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
26 You will come to the grave in full vigor, like a sheaf of grain gathered in season.
௨௬தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
27 Indeed, we have investigated, and it is true! So hear it and know for yourself.”
௨௭இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.