< Kwan 3 >
1 Ma e nonro mar joka Harun kod Musa e kinde mane Jehova Nyasaye owuoyo gi Musa e Got Sinai.
௧சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு:
2 Nying yawuot Harun ne gin Nadab ma wuowi makayo kod Abihu, Eliazar kod Ithamar.
௨ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
3 Mago ema ne nying yawuot Harun, mane gin jodolo mowir kendo mopwodhi mondo obed jodolo.
௩ஆசாரிய ஊழியம் செய்வதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம் பெற்ற ஆசாரியர்களான ஆரோனுடைய மகன்களின் பெயர்கள் இவைகளே.
4 Kata kamano Nadab kod Abihu, notho e nyim Jehova Nyasaye e kinde mane gichiwo misango ma ok opwodhi e Thim mar Sinai. Ne gionge yawuowi; omiyo Eliazar gi Ithamar kende ema nobedo jodolo e ndalo mane Harun wuon-gi pod ngima.
௪நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, யெகோவாவுடைய சந்நிதியில் இறந்துபோனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்;
5 Jehova Nyasaye nowacho ne Musa niya,
௫யெகோவா மோசேயை நோக்கி:
6 “Kel dhood jo-Lawi kendo ichiwgi e nyim jadolo Harun mondo gikonye tich.
௬“நீ லேவிகோத்திரத்தார்களைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.
7 Nyaka gitine kaachiel gi oganda duto e nyim Hemb Romo ka gitiyo tije mag kama ler.
௭அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யவேண்டும்.
8 Nyaka girit malongʼo gige Hemb Romo duto, ka gichopo chike duto mag jo-Israel monego gitim e Hemb Romo.
௮அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்கள் முதலானவைகளையும், இஸ்ரவேல் கோத்திரத்தின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவேண்டும்.
9 Chiw jo-Lawi e lwet Harun gi yawuote nikech gin e joma owal e dhood Israel mondo okonye tich.
௯ஆகையால் லேவியர்களை ஆரோனிடத்திலும் அவனுடைய மகன்களிடத்திலும் ஒப்புக்கொடு; இஸ்ரவேல் மக்களில் இவர்கள் முழுவதுமாக அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
10 Yier Harun kod yawuote mondo obed jodolo; ngʼato angʼata mosudo machiegni gi kama ler mar lemo nyaka negi.”
௧0ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.
11 Jehova Nyasaye nomedo wachone Musa niya,
௧௧பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
12 “Asekawo jo-Lawi koa ei jo-Israel e lo wuowi makayo mar chi ja-Israel moro ka moro. Jo-Lawi gin meka,
௧௨“இஸ்ரவேல் மக்களில் கர்ப்பம்திறந்து பிறக்கிற முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக, நான் லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாக இருக்கிறார்கள்.
13 nimar yawuowi makayo duto gin meka. Kane anego yawuowi makayo duto e piny Misri, ne awalo ne an awuon kayo moro amora e Israel, obed mar dhano kata mar le mondo gibed maga. An e Jehova Nyasaye.”
௧௩முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.
14 Jehova Nyasaye nowacho ne Musa e Thim mar Sinai niya,
௧௪பின்னும் யெகோவா சீனாய் வனாந்திரத்தில் மோசேயை நோக்கி:
15 “Kwan jo-Lawi kaluwore gi joutgi kod anywolagi. Kwan chwo duto chakre ja-dwe achiel kadhi nyime.”
௧௫“லேவியின் மக்களை அவர்களுடைய முன்னோர்களின் வம்சங்களின்படியே எண்ணவேண்டும்; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணு என்றார்.
16 Omiyo Musa nokwanogi, mana kaka Jehova Nyasaye nomiye chik.
௧௬அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை, தனக்குக் கட்டளையிட்டபடி மோசே அவர்களை எண்ணினான்.
17 Magi ema ne nyinge yawuot jo-Lawi: Gershon, Kohath gi Merari.
௧௭லேவியின் மகன்கள் தங்களுடைய பெயர்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
18 Magi ema ne nying joka Gershon: Libni gi Shimei.
௧௮தங்களுடைய வம்சத்தின்படியே கெர்சோனுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
19 Joka Kohath ne gin: Amram, Izhar, Hebron gi Uziel.
௧௯தங்களுடைய வம்சங்களின்படியே கோகாத்துடைய மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
20 Joka Merari ne gin: Mali gi Mushi. Magi ema ne anywola jo-Lawi, kaluwore gi dhoutgi.
௨0தங்களுடைய வம்சங்களின்படியே மெராரியினுடைய மகன்கள், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியர்களுடைய பிதாக்களின் வம்சத்தார்.
21 Koa e dhood Gershon, ne nitiere jo-Libni gi Shimei; mago ema ne joka Gershon.
௨௧கெர்சோனின் வழியாக லிப்னீயர்களின் வம்சமும் சீமேயியர்கள் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியர்களின் வம்சங்கள்.
22 Kar romb chwo duto kochakore ja-dwe achiel kadhi nyime noromo ji alufu abiriyo mia abich.
௨௨அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 7,500 பேராக இருந்தார்கள்.
23 Dhout jo-Gershon nonego dag yo podho chiengʼ mar kama ler.
௨௩கெர்சோனியர்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே முகாமிடவேண்டும்.
24 Jatend Gershon ne en Eliasaf wuod Lael.
௨௪கெர்சோனியர்களுடைய தகப்பன் வம்சத்திற்குத் தலைவன் லாயேலின் மகனாகிய எலியாசாப் என்பவன்.
25 Tij jo-Gershon e Kar Hemb Romo ne en rito Kama Ler mar Lemo kod hema, kaachiel gi gik moumego, kaka pasia mantiere e dhorangach mar Hemb Romo.
௨௫ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் குடும்பத்தாரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவும்,
26 Bende negirito pasia mag laru, pasia mar dhorangach mar laru molworo kama ler gi kendo mar misango kod tonde, kaachiel gi gik moko duto mitwechogo.
௨௬வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
27 E dhood Kohath ne nitiere jo-Amram, jo-Izhar, jo-Hebron, jo-Uziel; magi ema ne anywola joka Kohath.
௨௭கோகாத்தின் வழியாக அம்ராமியர்களின் வம்சமும் இத்சாரியர்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியர்களின் வம்சங்கள்.
28 Kar romb chwo duto kochakore ja-dwe achiel kadhi nyime ne romo ji alufu aboro mia auchiel. Tij jo-Kohath ne en rito kama ler mar lemo.
௨௮ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், 8,600 பேராக இருந்தார்கள்.
29 Dhood Kohath nonego dagi yo milambo mar kama ler.
௨௯கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.
30 Jatend dhout jo-Kohath ne en Elizafan wuod Uziel.
௩0அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.
31 Tijgi ne en rito Sandug Muma, mesa, rachungi mar taya, kende mag misengini, gige kama ler mar lemo mitiyogo tije dolo, pasia, kod gik moko duto mitiyogo tijego.
௩௧அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
32 Jatelo maduongʼ mar jo-Lawi ne en Eliazar wuod Harun jadolo. En ema ne oyiere bedo jatelo mag joma rito kama ler mar lemo.
௩௨ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார் என்பவன் லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவனாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாக இருக்கவேண்டும்.
33 E dhood Merari ne nitiere jo-Mali kod jo-Mushi; magi ema anywola joka Merari.
௩௩மெராரியின் வழியாக மகலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள்.
34 Kar romb chwo duto kochakore ja-dwe achiel kata moloyo dwe achiel mane okwan ne romo ji alufu auchiel mia ariyo.
௩௪அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 6,200 பேராக இருந்தார்கள்.
35 Jatend dhout Merari ne en Zuriel wuod Abihail. Nonego gidagi yo nyandwat mar kama ler.
௩௫அபியாயேலின் மகனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் முகாமிடவேண்டும்.
36 Joka Merari noyier mondo orit sirni mag kama ler mar lemo, yiend reru, sirni mamoko, mise, kaachiel gi gige duto kod gik moko duto mitiyogo kanyo,
௩௬அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிப்பொருட்களும், அதற்குரியவைகள் அனைத்தும்,
37 kaachiel gi sirni mochungʼ molworo laru man-gi mise, sigingi mag hema kod tonde.
௩௭சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே.
38 Musa kod Harun gi yawuote nonego dagi yo wuok chiengʼ mar Hemb Romo. Tijgi ne en rito kama ler mar lemo e lo jo-Israel. Ngʼato angʼata mane osudo machiegni gi kama ler mar lemo nyaka ne negi.
௩௮ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கிழக்குபக்கத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் மக்களின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும்.
39 Kar romb jo-Lawi duto mane okwan kaluwore gi chik mane Jehova Nyasaye ogolo kokadho kuom Musa kod Harun kaluwore gi anywolagi ne gin ji alufu piero ariyo gariyo, magi ne gin kaachiel gi nyithindo duto ma yawuowi kochakore ja-dwe achiel kadhi nyime.
௩௯மோசேயும், ஆரோனும், யெகோவாவுடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் 22,000 பேராக இருந்தார்கள்.
40 Jehova Nyasaye nowacho ne Musa niya, “Kwan nyithindo ma yawuowi makayo duto mag Israel kochakore ja-dwe achiel kadhi nyime kendo indik nyingegi piny.
௪0“அதன் பின்பு யெகோவா மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு,
41 Ket jo-Lawi obedna kaka kayo e lo kayo duto mag jo-Israel, kendo kaw jamb jo-Lawi obed e lo kweth makayo mag jamb jo-Israel. An e Jehova Nyasaye.”
௪௧இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லாவற்றிற்கும் பதிலாக லேவியர்களையும், இஸ்ரவேல் சந்ததியின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் யெகோவா என்றார்.
42 Omiyo Musa nokwano nyithindo makayo duto mag jo-Israel, mana kaka Jehova Nyasaye nochike.
௪௨அப்பொழுது மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான எல்லோரையும் எண்ணினான்.
43 Kar romb nyithindo ma yawuowi duto makayo ma ja-dwe achiel kadhi nyime, kondik nying-gi moro ka moro ne romo ji alufu piero ariyo gariyo, mia ariyo gi piero abiriyo gadek.
௪௩ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லோரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, 22,273 பேராக இருந்தார்கள்.
44 Jehova Nyasaye nochako owachone Musa niya,
௪௪அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
45 “Ket jo-Lawi mondo obedna kaka kayo e lo jo-Israel, kendo jamni mag jo-Lawi e lo jambgi. Jo-Lawi nyaka bed maga. An e Jehova Nyasaye.
௪௫“நீ இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறான அனைவருக்கும் பதிலாக லேவியர்களையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியர்களின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்; நான் யெகோவா.
46 Mondo omi ires jo-Israel makayo ji mia ariyo piero adek gabiriyo ma kwan-gi ohewo kwan midwaro mar jo-Lawi,
௪௬இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய 273 பேரிடத்திலும்,
47 chok shekel abich ne ngʼato ka ngʼato, kaluwore gi shekel mar kama ler mar lemo, ma pekne romo gera piero ariyo.
௪௭நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
48 Mi Harun kod yawuote pesa miwarogo jo-Israel momedore.”
௪௮லேவியர்களுடைய எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் பணத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடு” என்றார்.
49 Omiyo Musa nochoko pesa kuom joma ne omedore e kwan mane jo-Lawi oreso.
௪௯அப்படியே லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறானவர்களிடத்தில்,
50 Koa kuom kayo mag jo-Israel nochoko fedha ma pekne en shekel alufu mia achiel mia adek gi piero auchiel gabich, kaluwore gi shekel mar kama ler mar lemo.
௫01,365 சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,
51 Musa nochiwo ne Harun kod yawuote pesa miwarogo jo-Israel momedore mana kaka Jehova Nyasaye nochike.
௫௧யெகோவாவுடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.