< 2 Weche Mag Ndalo 36 >

1 Kendo jopinyno nokawo Jehoahaz wuod Josia mokete obedo ruoth e Jerusalem kar wuon mare.
அப்பொழுது மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பனுடைய இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
2 Jehoahaz ne ja-higni piero ariyo gadek kane odoko ruoth kendo nobedo e loch kodak Jerusalem kuom dweche adek.
யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
3 Ruodh jo-Misri nogole e loch Jerusalem kendo nochuno jo-Juda mondo ochiw osuru mar fedha ma pekne romo kilo alufu adek gi mia angʼwen kod dhahabu ma pekne romo kilo piero adek gangʼwen.
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி,
4 Ruodh Misri noketo Eliakim owadgi Jehoahaz ruodh Juda kod Jerusalem kendo noloko nying Eliakim ni Jehoyakim. Neko nokawo Jehoahaz owadgi Eliakim mi otero e twech Misri.
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
5 Jehoyakim ne ja-higni piero ariyo gabich kane odoko ruoth kendo nobedo e loch kuom higni apar gachiel kodak Jerusalem. Kendo notimo gik maricho e nyim wangʼ Jehova Nyasaye ma Nyasache.
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
6 Nebukadneza ruodh Babulon nomonje motweye gi rateke mag mula motere Babulon.
அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான்.
7 Bende Nebukadneza nokawo gige lemo mar hekalu mar Jehova Nyasaye moketogi e hekalu mare e piny Babulon.
யெகோவாவுடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளை பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
8 Kuom gik mamoko duto mag ndalo loch Jehoyakim, timbe maricho manotimo kod ketho malingʼ-lingʼ mane ofweny kuome, ondiki e kitap ruodhi mag Israel kod Juda. Kendo Jehoyakin wuode nobedo ruoth kare.
யோயாக்கீமுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
9 Jehoyakin ne ja-higni apar gaboro kane odoko ruoth kendo nobedo e loch kodak Jerusalem kuom dweche adek kod ndalo apar. Notimo richo e nyim wangʼ Jehova Nyasaye.
யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.
10 E ndalo chwiri ruoth Nebukadneza nooro wach mondo oome otere Babulon kaachiel gi gige lemo mabeyo mag hekalu mar Jehova Nyasaye kendo noketo owadgi wuon Jehoyakin, ma nyinge Zedekia mondo obed ruodh Juda kod Jerusalem.
௧0அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், யெகோவாவுடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
11 Zedekia ne ja-higni piero ariyo gachiel kane obedo ruoth kendo nobedo e loch kuom higni apar gachiel kodak Jerusalem.
௧௧சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு,
12 Notimo richo e nyim Jehova Nyasaye ma Nyasache kendo ne ok obolore e nyim Jeremia janabi mane nyise wach Jehova Nyasaye.
௧௨தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் யெகோவாவுடைய வார்த்தையைக் கூறிய எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.
13 Bende nongʼanyo ni ruoth Nebukadneza mane okete mokwongʼore gi nying Nyasaye. Ne toke obedo matek ta kendo chunye ne ok odewo mondo oduog ir Jehova Nyasaye ma Nyasach Israel.
௧௩தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
14 To bende jotelo madongo duto mag jodolo kod ji nomedo bedo joma ok jo-ratiro, ka giluwo timbe mamono mag oganda kendo ne gichido hekalu mar Jehova Nyasaye mane osepwodho Jerusalem.
௧௪ஆசாரியர்களில் முக்கியமான அனைவரும் மற்றும் மக்களும் கூடி புறவகைகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்செய்து, யெகோவா எருசலேமிலே பரிசுத்தம்செய்த அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
15 Jehova Nyasaye, ma Nyasach kweregi nooronegi wach kokalo kuom jootene kinde ka kinde nikech nokecho joge kod kar dakne.
௧௫அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
16 To negimedo jaro joote Nyasaye ka gichayo wechene kendo ka ginyiero jonabi mage nyaka mirima nomako Jehova Nyasaye kod joge maonge kaka dikony.
௧௬ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.
17 Omiyo ne okelonigi ruodh jo-Babulon mane onego yawuotgi matindo gi ligangla e kama ler mar lemo kendo ne ok okecho wuowi kata nyako, ngʼat motegno kata jaduongʼ moti. Nyasaye nochiwogi duto e lwet Nebukadneza.
௧௭ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரச்செய்தார்; அவன் அவர்களுடைய வாலிபர்களை அவர்களின் பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தால் கொன்று, வாலிபர்களையும் கன்னிப்பெண்களையும் முதியோர்களையும் நரைமுடி உள்ளவர்களையும் விட்டுவிடவில்லை; எல்லோரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
18 Nokawo gige lemo duto madongo gi matindo mane nitiere e hekalu mar Nyasaye, kod gik mane okan e hekalu mar Jehova Nyasaye gi gik moko duto mane okan e od ruoth kod od jodonge moterogi Babulon.
௧௮அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
19 Ne giwangʼo hekalu mar Nyasaye kendo negimuko ohinga mar Jerusalem; mane giwangʼo ute ruoth duto kendo negiketho gimoro amora ma nengogi tek mane ni kanyo.
௧௯அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் மதிலை இடித்து, அதன் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த அழகான பொருட்களையெல்லாம் அழித்தார்கள்.
20 Nokawo jogo mane otony e nek mag ligangla noterogi e twech Babulon kendo olokogi wasumbinige kod mag yawuote nyaka ochopo ndalo mane jo-Pasia okawe loch.
௨0பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா அரசாட்சி ஏற்படுத்தப்படும்வரை அங்கே அவர்கள் அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அடிமைகளாக இருந்தார்கள்.
21 Piny nobedo mamor koyudo yweyone mag Sabato, kinde duto mane odongʼ gunda, nyaka higni piero abiriyo orumo mana kaka wach Jehova Nyasaye nowacho gi dho Jeremia.
௨௧யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.
22 E higa mokwongo mar loch Sairas ruodh Pasia, mondo ochop singo mar wach Jehova Nyasaye mane Jeremia okoro, Jehova Nyasaye nowuoyo gi chuny Sairas ruodh Pasia mondo ogol lendo e pinye duto koketo e ndiko kama:
௨௨எரேமியாவின் வாயினாலே யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேற, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
23 Ma e gima Sairas ruodh Pasia wacho: “‘Jehova Nyasaye, ma Nyasach polo osemiya pinjeruodhi duto manie piny kendo oseyiera mondo agerne hekalu e Jerusalem manie piny Juda. Ngʼato angʼata kuom joge manie dieru, nyalo dhi kendo mad Jehova Nyasaye ma Nyasache bed kode.’”
௨௩அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.

< 2 Weche Mag Ndalo 36 >