< ମାତିଉ 2 >
1 ୧ ଏରଦ୍ ରାଜାର୍ ସାସନ୍ ବେଲେ, ଜିଉଦା ରାଇଜର୍ ବେତ୍ଲିଇମେ ଜିସୁ ଜନମ୍ ଅଇଲା । ଜନମ୍ ଅଇ ଚନେକ୍ ଜିବାକେ ପୁରୁବ୍ ଦେସର୍ କେତେଟା ତାରାର୍ ବିସଇ ପଡ୍ତେ ରଇବା ପଣ୍ଡିତ୍ମନ୍ ଜିରୁସାଲାମେ ଆସି ପାଚାର୍ଲାଇ,
௧ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
2 ୨ “ଜନ୍ ପିଲା ଜିଉଦିମନର୍ ରାଜା ଅଇବାକେ ଜନମ୍ ଅଇଲାଆଚେ, ସେ କନ୍ତି ଆଚେ? କାଇକେବଇଲେ ଆମେ ପୁରୁବ୍ ଦେସେ ତାର୍ ତାରା ଦେକି ତାକେ ପୁଜା କର୍ବାର୍ ଆସିଆଚୁ ।”
௨“யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைத் தொழுதுகொள்ள வந்தோம்” என்றார்கள்.
3 ୩ ପଣ୍ଡିତ୍ମନର୍ କାତା ସୁନି ଏରଦ୍ ରାଜା ଆରି ତାର୍ ସଙ୍ଗ୍ ରଇବା ଜିରୁସାଲାମର୍ ଲକ୍ମନ୍ ସବୁ କିଲ୍ବିଲ୍ ଅଇଗାଲାଇ ।
௩ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
4 ୪ ଆରି ଏରଦ୍ ସବୁ ମୁକିଅ ପୁଜାରିମନ୍କେ ଆରି ସାସ୍ତର୍ ସିକାଉମନ୍କେ ଡାକାଇ କରି, “ମସିଅ ଜେ କି କିରିସ୍ଟ କନ୍ ଜାଗାଇ ଜନମ୍ ଅଇଆଚେ?” ସେଟା ସେମନର୍ତେଇ ଅନି ବୁଜ୍ବାକେ ଚେସ୍ଟା କଲା ।
௪அவன் பிரதான ஆசாரியர்கள், மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து: “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று” அவர்களிடத்தில் விசாரித்தான்.
5 ୫ ପଣ୍ଡିତ୍ମନ୍ ଏରଦ୍ ରାଜାକେ କଇଲାଇ, ଜିଉଦା ରାଇଜର୍ ବେତ୍ଲିଇମ୍ ଗଡେ, ଜନ୍ଟାକି ଗଟେକ୍ ବବିସତ୍ବକ୍ତା ଏନ୍ତାରି ଲେକିଆଚେ ।
௫அதற்கு அவர்கள்: “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அது ஏனென்றால்:
6 ୬ ଏ ଜିଉଦା ଦେସର୍ ବେତ୍ଲିଇମ୍, ତୁଇ ଜିଉଦା ରାଇଜର୍ ମୁକିଅ ଗଡ୍ମନର୍ତେଇ ଅନି ସାନ୍ ନଉଁସ୍, କାଇକେବଇଲେ ମର୍ ଇସ୍ରାଏଲର୍ ଲକ୍ମନ୍କେ ବାଟ୍ ଦେକାଇସି, ଏନ୍ତାରି ଗଟେକ୍ ସାସନ୍କାରିଆ ତର୍ତେଇଅନି ଉବଜ୍ସି ।
௬யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
7 ୭ ଏଟା ସୁନି କରି ଏରଦ୍ ରାଜା ସେ ପଣ୍ଡିତ୍ମନ୍କେ ଲୁଚ୍ତେ ଡାକାଇ, ତାରା କନ୍ ବେଲାଇ ଉଦିରଇଲା, ସେମନର୍ତେଇ ଅନି ଟିକ୍ ସଙ୍ଗ୍ ବୁଜିନେଲା ।
௭அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து:
8 ୮ ତାର୍ପଚେ ସେମନ୍କେ କଇ ପାଟାଇଲା, “ତମେ ଜାଆ ଆରି ବେତ୍ଲିଇମେ ସେ ପିଲାକେ ନିମାନ୍ କରି କଜିଦେକା, ଆରି ପିଲା ମିଲ୍ଲେସରି ମକେ ଜାନାଆ ମୁଇ ମିସା ଜାଇ ତାକେ ଦର୍ସନ୍ କର୍ବି ।”
௮நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள்; நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு, நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9 ୯ ପଣ୍ଡିତ୍ମନ୍ ରାଜାର୍ କାତା ସୁନି ସେ ଜାଗାଇଅନି ବାରିଗାଲାଇ । ଗାଲାବେଲେ ଏଦେ ଦେକା! ସେମନ୍ ପୁରୁବ୍ ଦେସେ ଜନ୍ ତାରା ଦେକି ରଇଲାଇ, ସେ ତାରା ଆରି ତରେକ୍ ଡିସ୍ଲା ।
௯ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.
10 ୧୦ ସେମନ୍ ତାରା ଦେକି ବେସି ସାର୍ଦା ଅଇଗାଲାଇ । ତାରା ସେମନର୍ ଆଗେ ଜାଇକରି ଜିସୁ ରଇଲା ଜାଗାର୍ ଉପ୍ରେ ଅଟ୍କିଗାଲା ।
௧0அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
11 ୧୧ ପଣ୍ଡିତ୍ମନ୍ ସେ ଗର୍ ବିତ୍ରେ ପୁରି ପିଲାକେ ତାର୍ ମା ମରିୟମ୍ ସଙ୍ଗ୍ ରଇଲାଟା ଦେକି, ତାକେ ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ ଜୁଆର୍ କଲାଇ, ଆରି ଆନିରଇବା ସୁନା, କୁନ୍ଦୁୁରୁ ଆରି ଗନ୍ଦ୍ରସ୍ ବେଟି, ପିଲାକେ ଦେଲାଇ ।
௧௧அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.
12 ୧୨ ପଚେ ସେମନ୍ ଏରଦର୍ ଲଗେ ଆରିତରେକ୍ ନ ଜାଇକରି ବିନ୍ ବାଟେ ନିଜର୍ ଦେସେ ବାଉଡି ଗାଲାଇ । କାଇକେବଇଲେ ଏରଦର୍ ଟାନେ ଆରିତରେକ୍ ବାଉଡି ନ ଜିବାକେ ପର୍ମେସର୍ ସେମନ୍କେ ସପ୍ନେ ଆଦେସ୍ ଦେଇରଇଲା ।
௧௨பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.
13 ୧୩ ପଣ୍ଡିତ୍ମନ୍ ଗାଲାପଚେ, ପର୍ମେସରର୍ ଗଟେକ୍ ଦୁତ୍ ଜସେପ୍କେ ସପ୍ନେ ଦର୍ସନ୍ ଦେଇ କଇଲା, “ଉଟ୍, ପିଲାକେ ଆରି ତାକର୍ ଆୟାକେ ଦାରି ମିସର୍ ଦେସେ ଦାପ୍ରେ ଉଟିଜା । ଏରଦ୍ ପିଲାକେ ମରାଇବାକେ କଜିବୁଲ୍ସି । ମୁଇ ସେ ଜାଗା ଚାଡା ବଲି ନ କଇବା ଜାକ ତେଇସେ ରୁଆ ।”
௧௩அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
14 ୧୪ ଏ କାତା ସୁନି ଜସେପ୍ ସେ ରାତି, ପିଲାକେ ଆରି ତାର୍ ମାକେ ଦାରି ମିସର୍ ଦେସେ ଉଟିଗାଲା ।
௧௪அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,
15 ୧୫ ଏରଦ୍ ରାଜା ମର୍ବା ଜାକ ମିସର୍ ଦେସେସେ ରଇଲାଇ, ଜେନ୍ତାର୍ କି ବବିସତ୍ବକ୍ତା କଇରଇଲା ମାପ୍ରୁର୍ ବାକିଅ ସିଦ୍ ଅଇଲା, ମର୍ ପିଲାକେ ମୁଇ ମିସର୍ ଦେସେଅନି ଡାକି ଆନ୍ଲି ।
௧௫ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான். “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16 ୧୬ ପୁରୁବ୍ ଦେସେଅନି ଆସିରଇଲା ପଣ୍ଡିତ୍ମନ୍ ତାକେ ନାଡାଇ କରି ଉଟିଗାଲାଇ ଆଚତ୍ ବଲି ଜାନି, ଏରଦ୍ ବେସି ରିସା ଅଇଗାଲା । ବେତ୍ଲିଇମ୍ ଆରି ସେ ଲଗେ ପାକେ ରଇବା ଦୁଇ ବରସ୍ ଅନି ତଲେ ରଇଲା ସବୁ ପିଲାମନ୍କେ ମରାଇବାକେ ଆଦେସ୍ ଦେଲା । ପଣ୍ଡିତ୍ମନର୍ ଟାନେଅନି ତାରା ଡିସ୍ତେ ରଇବା ବେଲା ସେ ଜାନିରଇଲା । ସେ ଇସାବେ ପିଲାମନର୍ ବରସ୍ ଟିକ୍ କରିରଇଲା ।
௧௬அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17 ୧୭ ଏନ୍ତି ଅଇଲାଜେ ଜିରିମିୟ ବବିସତ୍ବକ୍ତା କଇଲା ଏ ବାକିଅ ପୁରାପୁରୁନ୍ ଅଇଲା । ସେ ଏନ୍ତି କଇରଇଲା,
௧௭“புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
18 ୧୮ ରାମା ନାଉଁର୍ ସଅରେ ମାର୍ଚପ୍ ଅଇ କାନ୍ଦ୍ବାଟା ସୁନି ଅଇଲାନି, ରାଏଲ୍ ତାର୍ ପିଲାମନର୍ ପାଇ କାନ୍ଦ୍ଲାନି । ତାକେ ଜେତେକ୍ ବୁଜାଇଲେ ମିସା ବୁଜେନାଇ । କାଇକେବଇଲେ ତାର୍ ପିଲାମନ୍ ସବୁ ମରିଜାଇରଇଲାଇ ।
௧௮எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
19 ୧୯ ଏରଦ୍ ମଲାପଚେ, ଏଦେ ଦେକା! ମାପ୍ରୁର୍ ଗଟେକ୍ ଦୁତ୍ ମିସର୍ ଦେସେ ଜସେପ୍କେ ଦର୍ସନ୍ ଦେଇ କଇଲା,
௧௯ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:
20 ୨୦ “ଉଟ୍ ଆରି ବାରଇକରି, ଦୁଇ ମାଆ ପିଲାକେ ଇସ୍ରାଏଲ୍ ଦେସେ ଦାରିଜା । କାଇକେବଇଲେ ଜନ୍ ଲକ୍ମନ୍ କି ପିଲାର୍ ଜିବନ୍ ନେବାକେ ଚେସ୍ଟା କର୍ତେରଇଲାଇ, ସେମନ୍ ମରିଗାଲାଇ ଆଚତ୍ ।”
௨0“நீ எழுந்து, பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள்” என்றான்.
21 ୨୧ ଜସେପ୍ ଏ କାତା ସୁନି ଜିସୁ ଆରି ତାର୍ ମାଆ ମରିୟମ୍ ସଙ୍ଗ୍ ବାରଇକରି ଇସ୍ରାଏଲ୍ ଦେସେ ବାଉଡି ଆଇଲାଇ ।
௨௧அவன் எழுந்து பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
22 ୨୨ ମାତର୍ ଜସେପ୍, ଏରଦର୍ ପଚେ ତାର୍ ପଅ ଆର୍କିଲାୟ ଜିଉଦା ରାଇଜର୍ ରାଜା ଅଇଆଚେ ବଲି ସୁନିକରି ତେଇ ଜିବାକେ ଡର୍ଲା ।
௨௨ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,
23 ୨୩ ମାତର୍ ଆରିଗଟେକ୍ ବିନ୍ ସପନ୍ ଇସାବେ ଗାଲିଲି ଦେସେ ଜାଇକରି ନାଜରିତ୍ ନାଉଁର୍ ଗଡେ ବାସା ଅଇ ରଇଲା । ଜେନ୍ତାର୍ କି ବବିସତ୍ବକ୍ତା କଇଲା ଏ ବାକିଅ ସିଦ୍ ଅଇଲା । ସେ ଏନ୍ତି ବଲି କଇରଇଲା, “ସେ ନାଜରିତିୟା ବଲି ଡାକ୍ପୁଟା ଅଇସି ।”
௨௩நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான். “நசரேயன் எனப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.