< Rut 4 >
1 Boaz var imidlertid gået op til Byporten og havde sat sig der. Og se, den Løser, Boaz havde talt om, kom netop forbi. Da tiltalte han ham og sagde: "Kom og sæt dig her!" Da den anden kom og satte sig,
௧போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓ அண்ணே, என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
2 fik han fat i ti af Byens Ældste og sagde: "Sæt eder her!" Og de satte sig der.
௨அப்பொழுது அவன் பட்டணத்தின் பெரியவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
3 Da sagde han til Løseren: "Den Marklod, som tilhørte vor Slægtning Elimelek, vil No'omi, der er kommet tilbage fra Moab, sælge.
௩அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
4 Derfor tænkte jeg, at jeg vilde lade dig det vide og sige: Køb den i Overværelse af dem, der sidder her, og mit Folks Ældste! Vil du løse den, så gør det; men vil du ikke, så sig til, at jeg kan vide det; thi der er ingen anden til at løse end du og derefter jeg selv!" Han svarede: "Jeg vil løse den!"
௪ஆகவே, நீர் அதை ஊர் மக்களுக்கு முன்பாகவும், என்னுடைய மக்களின் பெரியவர்களுக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்குத் தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை உறவுமுறையாக மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள விருப்பமில்லாதிருந்தால், நான் அதைத் தெரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கக்கூடியவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5 Da sagde Boaz: "Men samtidig med at du køber Marken af No'omi, køber du også Moabiterinden Rut, den afdødes Enke, for at rejse den afdødes Navn over hans Arvelod!"
௫அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான்.
6 Da svarede Løseren: "Så kan jeg ikke blive Løser, da jeg derved vilde skade min egen Arvelod. Løs du, hvad jeg skulde løse, thi jeg kan ikke!"
௬அப்பொழுது அந்த உறவினன்: நான் என் சுதந்திரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கவேண்டியதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
7 Nu havde man i gamle Dage i Israel den Skik til Stadfæstelse af Løsning og Byttehandel, at man trak sin Sko af og gav den anden Part den; således blev en Sag vidnefast i Israel.
௭மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் எல்லாக் காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன்னுடைய காலணியைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழக்கமாக இருந்த உறுதிப்பாடு.
8 Idet nu Løseren sagde til Boaz: "Køb du den!" trak han derfor sin Sko af.
௮அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான்.
9 Da sagde Boaz til de Ældste og alle dem, der var til Stede: "I er i Dag Vidner på, at jeg køber alt, hvad der tilhørte Elimelek, og alt, hvad der tilhørte Kiljon og Malon, af No'omi;
௯அப்பொழுது போவாஸ் பெரியவர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
10 og tillige køber jeg mig Moabiterinden Rut, Malons Enke, til Hustru for at rejse den afdødes Navn over hans Arvelod, at den afdødes Navn ikke skal udslettes blandt hans Brødre og fra hans Hjemstavns Port; I er Vidner i Dag!"
௧0இதுவுமல்லாமல், இறந்தவனுடைய சகோதரர்களுக்குள்ளும், ஊரார்களுக்குள்ளும், அவனுடைய பெயர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்திரத்திலே அவனுடைய பெயரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாக இருந்த மோவாபியப் பெண்ணான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
11 Da sagde alle Folkene, som var i Byporten, og de Ældste: "Vi er Vidner! HERREN lade den Kvinde, der nu drager ind i dit Hus, blive som Rakel og Lea, de to, der byggede Israels Hus. Bliv mægtig i Efrata, og dit Navn vorde priset i Betlehem!
௧௧அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் யெகோவா இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
12 Måtte dit Hus blive som Perezs Hus, ham, Tamar fødte Juda, ved de Efterkommere, HERREN giver dig af denne unge Kvinde!"
௧௨இந்தப் பெண்ணிடம் யெகோவா உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
13 Så ægtede Boaz Rut, og hun blev hans Hustru; og da han gik ind til hende, lod HERREN hende blive frugtsommelig, og hun fødte en Søn.
௧௩போவாஸ் ரூத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளுடன் வாழ்ந்தபோது, அவள் கர்ப்பமடைந்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றெடுக்கக் யெகோவா அருள்செய்தார்.
14 Da sagde Kvinderne til No'omi: "Lovet være HERREN, som ikke lod dig uden Løser i Dag, og hans Navn skal prises i Israel.
௧௪அப்பொழுது பெண்கள் நகோமியைப் பார்த்து: உறவினன் இல்லாமல்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயவுசெய்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவனுடைய பெயர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
15 Han blive din Trøster og Forsørger i din Alderdom; thi din Sønnekone, som viste dig Kærlighed, har født ham, hun, som er dig mere værd end syv Sønner!"
௧௫அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாக இருப்பானாக; உன்னைச் சிநேகித்து, ஏழு மகன்களைப்பார்க்கிலும் உனக்கு அருமையாக இருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றெடுத்தாளே என்றார்கள்.
16 Da tog No'omi Barnet i sin Favn, og hun blev dets Fostermoder.
௧௬நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
17 Og Naboerskerne gav ham Navn, idet de sagde: "No'omi har fået en Søn!" Og de kaldte ham Obed. Han blev Fader til Davids Fader Isaj.
௧௭அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
18 Dette er Perezs Slægtebog: Perez avlede Hezron,
௧௮பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
19 Hezron avlede Ram, Ram avlede Amminadab,
௧௯எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
20 Amminadab avlede Nahasjon, Nahasjon avlede Salmon,
௨0அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
21 Salmon avlede Boaz, Boaz avlede Obed,
௨௧சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
22 Obed avlede Isaj, og Isaj avlede David.
௨௨ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.