< Hoseas 3 >
1 Og HERREN sagde til mig: "Gå atter hen og elsk en kvinde, som har Elskere - og boler, ligesom HERREN elsker Israeliterne, endskønt de vender sig til fremmede Guder og elsker Rosinkager."
௧பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
2 Så købte jeg mig hende for femten Sekel Sølv og en Homer og en Letek Byg.
௨அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி,
3 Og jeg sagde til hende: "I lang Tid skal du vente på mig; du må ikke bedrive Hor eller tilhøre nogen Mand; heller ikke jeg vil komme til dig."
௩அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
4 Thi i lang Tid skal Israeliterne vente uden Konge og Fyrste, uden Slagtoffer og, Stenstøtte, uden Efod og Husgud.
௪இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
5 Siden skal Israeliterne omvende sig og søge HERREN deres Gud og David, deres Konge, og bævende komme til HERREN og hans Velsignelse i de sidste Dage.
௫பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.