< Salme 93 >
1 HERREN har vist, han er Konge, har iført sig Højhed, HERREN har omgjordet sig med Styrke. Han grundfæsted Jorden, den rokkes ikke.
யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்; யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்; உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது.
2 Din Trone staar fast fra fordum, fra Evighed er du!
உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது; நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர்.
3 Strømme lod runge, HERRE, Strømme lod runge deres Drøn, Strømme lod runge deres Brag.
யெகோவாவே, கடல்கள் எழும்பின; கடல்கள் தங்கள் குரலை எழுப்பின; கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின.
4 Fremfor vældige Vandes Drøn, fremfor Havets Brændinger er HERREN herlig i det høje!
பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
5 Dine Vidnesbyrd er fuldt at lide paa, Hellighed tilkommer dit Hus, HERRE, saa længe Dagene varer!
யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன; பரிசுத்தம் உமது ஆலயத்தை என்றென்றும் அலங்கரிக்கிறது.