< Salme 67 >
1 Til Sangmesteren. Med Strengespil. En Salme. En Sang.
௧இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
2 Gud være os naadig og velsigne os, han lade sit Ansigt lyse over os, (Sela)
௨தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
3 for at din Vej maa kendes paa Jorden, din Frelse blandt alle Folk.
௩தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4 Folkeslag skal takke dig, Gud, alle Folkeslag takke dig;
௪தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
5 Folkefærd skal glædes og juble, thi med Retfærd dømmer du Folkeslag, leder Folkefærd paa Jorden. (Sela)
௫தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6 Folkeslag skal takke dig, Gud, alle Folkeslag takke dig!
௬பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7 Landet har givet sin Grøde, Gud, vor Gud, velsigne os, Gud velsigne os, saa den vide Jord maa frygte ham!
௭தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.