< Salme 110 >

1 Af David. En Salme. HERREN sagde til min Herre: »Sæt dig ved min højre Haand, til jeg lægger dine Fjender som en Skammel for dine Fødder!«
தாவீதின் பாடல். யெகோவா என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
2 Fra Zion udrækker HERREN din Vældes Spir; hersk midt iblandt dine Fjender!
யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
3 Dit Folk møder villigt frem paa din Vældes Dag; i hellig Prydelse kommer dit unge Mandskab til dig som Dug af Morgenrødens Moderskød.
உமது மகத்துவத்தின் நாளிலே உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.
4 HERREN har svoret og angrer det ej: »Du er Præst evindelig paa Melkizedeks Vis.«
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
5 Herren ved din højre knuser Konger paa sin Vredes Dag,
உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
6 blandt Folkene holder han Dom, fylder op med døde, knuser Hoveder viden om Lande.
அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
7 Han drikker af Bækken ved Vejen, derfor løfter han Hovedet højt.
வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

< Salme 110 >