< Esajas 3 >
1 Thi se, Herren, Hærskarers HERRE, fratager Jerusalem og Juda støtte og Stav, hver Støtte af Brød og hver støtte af vand:
௧இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;
2 Helt og Krigsmand, Dommer og Profet, Spaamand og Ældste,
௨பராக்கிரமசாலியையும், போர்வீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், ஞானியையும், மூப்பனையும்;
3 Halvhundredfører og Stormand, Raadsherre og Haandværksmester og den, der er kyndig i Trolddom.
௩ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
4 Jeg giver dem Drenge til Øverster, Drengekaadhed skal herske over dem.
௪வாலிபர்களை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
5 I Folket undertrykker den ene den anden, hver sin Næste; Dreng sætter sig op imod Olding, Usling mod Hædersmand.
௫மக்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடையூறு செய்வான்.
6 Naar da en Mand tager fat paa en anden i hans Fædrenehus og siger: »Du har en Kappe, du skal være vor Hersker, under dig skal dette faldefærdige Rige staa!«
௬அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டைச்சேர்ந்த தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு மேலாடை இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டிற்கு இணையான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;
7 saa svarer han paa hin Dag: »Jeg vil ikke være Saarlæge! Jeg har hverken Brød eller Klæder i Huset, gør ikke mig til Folkets Overhoved!«
௭அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாக இருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை ஆடையுமில்லை; என்னை மக்களுக்கு அதிபதியாக ஏற்படுத்தவேண்டாம் என்பான்.
8 Thi Jerusalem snubler, og Juda falder, fordi de med Tunge og Gerning er mod HERREN i Trods mod hans Herligheds Øjne.
௮ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், யெகோவாவுடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
9 Deres Ansigtsudtryk vidner imod dem; de kundgør deres Synd som Sodoma, dølger intet. Ve deres Sjæl, de styrted sig selv i Vaade.
௯அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.
10 Salige de retfærdige, dem gaar det godt, deres Gerningers Frugt skal de nyde;
௧0உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
11 ve den gudløse, ham gaar det ilde; han faar, som hans Hænder har gjort.
௧௧துன்மார்க்கனுக்கு ஐயோ, அவனுக்குக் கேடு உண்டாகும்; அவனுடைய கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
12 Mit Folk har en Dreng ved Styret, og over det hersker Kvinder. Dine Ledere, mit Folk, leder vild, gør Vejen, du vandrer, vildsom.
௧௨பிள்ளைகள் என் மக்களை ஒடுக்குகிறவர்களாக இருக்கிறார்கள்; பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். என் மக்களோ, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.
13 Til Rettergang er HERREN traadt frem, han staar og vil dømme sit Folk.
௧௩யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
14 HERREN møder til Doms med de Ældste i sit Folk og dets Fyrster: »Det er jer, som gnaved Vingaarden af, I har Rov fra den arme til Huse.
௧௪யெகோவா தமது மக்களின் மூப்பர்களையும், அவர்களுடைய பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சைத்தோட்டத்தை அழித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
15 Hvor kan I træde paa mit Folk og male de arme sønder?« saa lyder det fra Herren, Hærskarers HERRE.
௧௫நீங்கள் என் மக்களை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறார்.
16 HERREN siger: Eftersom Zions Døtre bryster sig og gaar med knejsende Nakke og kælne Blikke, gaar med trippende Gang og med raslende Ankelkæder —
௧௬பின்னும் யெகோவா சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
17 gør Herren Issen skaldet paa Zions Døtre og blotter deres Tindingers Lokker.
௧௭ஆதலால் ஆண்டவர் சீயோன் பெண்களின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; யெகோவா அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
18 Paa hin Dag afriver Herren al deres Pynt: Ankelringe, Pandebaand, Halvmaaner,
௧௮அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும்,
19 Perler, Armbaand, Flor,
௧௯ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,
20 Hovedsmykker, Ankelkæder, Bælter, Lugtedaaser, Trylleringe,
௨0தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
21 Fingerringe, Næseringe,
௨௧தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
22 Festklæder, Underdragter, Sjaler, Tasker,
௨௨விநோத உடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
23 Spejle, Lin, Hovedbaand og Slør.
௨௩கண்ணாடிகளையும், மெல்லிய ஆடைகளையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் கழற்றிப்போடுவார்.
24 For Vellugt kommer der Stank, i Stedet for Bælte Reb, for Fletninger skaldet Isse, for Stadsklæder Sæk om Hofte, for Skønhedsmærke Brændemærke.
௨௪அப்பொழுது, சுகந்தத்திற்குப் பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான உடைகளுக்குப் பதிலாக சணல்உடையும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.
25 Dine Mænd skal falde for Sværd, dit unge Mandskab i Strid.
௨௫உன் கணவன் பட்டயத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
26 Hendes Porte skal sukke og klage og hun sidde ensom paa Jorden.
௨௬அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.