< Salme 76 >
1 Til Sangmesteren; med Strengeleg; en Psalme af Asaf, en Sang.
௧அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
2 Gud er kendt i Juda, hans Navn er stort i Israel,
௨சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
3 og hans Paulun var i Salem, og hans Bolig i Zion.
௩அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
4 Der sønderbrød han Buens Lyn, Skjold og Sværd og Krig. (Sela)
௪மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
5 Du straaler i Glans og Herlighed fra de paa Bytte rige Bjerge.
௫தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
6 De stolte af Hjerte blive plyndrede, de slumre deres Søvn; og ingen af Stridsmændene fandt Magt i deres Hænder.
௬யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7 For din Trusel, Jakobs Gud! er baade Hest og Vogn falden i den dybe Søvn.
௭நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8 Du, ja, du er forfærdelig, og hvo kan bestaa for dit Ansigt, saa snart som du bliver vred?
௮நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது,
9 Du lod høre Dom fra Himmelen; Jorden frygtede og blev stille,
௯வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10 da Gud gjorde sig rede til Dom, til at frelse alle de sagtmodige paa Jorden. (Sela)
௧0மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11 Thi et Menneskes Vrede bereder dig Pris; hvad der bliver tilovers af Vreden, omgjorde du dig med.
௧௧பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
12 Gører Løfte og betaler Herren, eders Gud det; alle I, som ere omkring ham, skulle bringe ham, den forfærdelige, Gave. Han borttager Fyrsternes Mod, han er forfærdelig for Kongerne paa Jorden.
௧௨பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.