< Salme 150 >
1 Lover Gud i hans Helligdom, lover ham i hans Vældes udstrakte Befæstning!
அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
2 Lover ham for hans vældige Gerninger, lover ham efter hans store Magt!
அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3 Lover ham med Basuns Klang, lover ham med Psalter og Harpe!
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
4 Lover ham med Tromme og Dans, lover ham med Strenge og Fløjte!
தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
5 Lover ham med lydende Cymbler, lover ham med klingende Cymbler!
கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
6 Alt det, som har Aande, love Herren! Halleluja!
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. அல்லேலூயா.