< 1 Janův 1 >
1 Přinášíme a dosvědčujeme vám zvěst o tom, co bylo od počátku: o Ježíši, který je živé slovo –
௧ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2 viditelný projev Otcova věčného života. Slyšeli jsme ho, viděli jsme ho, sledovali jsme ho, dotýkali jsme se ho. (aiōnios )
௨அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios )
3 Podáváme vám o něm zprávu, abyste se s námi sjednotili, jako jsme my zajedno s Otcem a s jeho Synem Ježíšem Kristem,
௩நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
4 aby se tím naše radost vzájemně znásobila.
௪உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
5 Předáváme vám poselství, které jsme přijali od Krista: Bůh je světlo a není v něm žádná tma.
௫தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
6 Tvrdíme-li, že máme k Bohu dobrý vztah, a přesto setrváváme ve tmě, lžeme a náš život je nepravdivý.
௬நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
7 Žijeme-li však stále ve světle Boží přítomnosti, krev Ježíše Krista, jeho Syna, nás očišťuje od každého hříchu a nic neruší náš vzájemný vztah.
௭அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8 Tvrdíme-li, že nehřešíme, pak klameme sami sebe a nechceme si připustit pravdu.
௮நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
9 Jestliže však své hříchy vyznáváme, smíme se spolehnout na Boží sliby, že nás očišťuje od každé špinavosti a promíjí nám každé selhání.
௯நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
10 Říkáme-li, že nic špatného neděláme, obviňujeme Boha ze lži a vůbec ho nechápeme.
௧0நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.