< Žalmy 112 >
1 Halelujah. Blahoslavený muž, kterýž se bojí Hospodina, a v přikázaních jeho má velikou líbost.
அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 Mocné na zemi bude símě jeho, rodina upřímých požehnání dojde.
அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
3 Zboží a bohatství v domě jeho, a spravedlnost jeho zůstává na věky.
செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
4 Vzchází ve tmách světlo upřímým, milostivý jest, milosrdný a spravedlivý.
நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
5 Dobrý člověk slitovává se i půjčuje, a řídí své věci s soudem.
தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
6 Nebo nepohne se na věky, v paměti věčné bude spravedlivý.
நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
7 Slyše zlé noviny, nebojí se; stálé jest srdce jeho, a doufá v Hospodina.
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
8 Utvrzené srdce jeho nebojí se, až i uzří pomstu na svých nepřátelích.
அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
9 Rozděluje štědře, a dává nuzným; spravedlnost jeho zůstává na věky, roh jeho bude vyvýšen v slávě.
அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
10 Bezbožný vida to, zlobiti se, zuby svými škřipěti a schnouti bude; žádost bezbožníků zahyne.
கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.