< Žalmy 11 >
1 Přednímu zpěváku, žalm Davidův. Hospodina doufám, kterakž tedy říkáte duši mé: Uleť s hory své jako ptáče?
௧இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2 Nebo aj, bezbožníci napínají lučiště, přikládají šípy své na tětivo, aby stříleli skrytě na upřímé srdcem.
௨இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3 Ale těmi usilováními zkaženi budou; nebo spravedlivý co učinil?
௩அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, நீதிமான் என்ன செய்வான்?
4 Hospodin jest v chrámě svatém svém, trůn Hospodinův v nebi jest; oči jeho hledí, víčka jeho zkušují synů lidských.
௪யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
5 Hospodin zkušuje spravedlivého, bezbožníka pak a milujícího nepravost nenávidí duše jeho.
௫யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6 Dštíti bude na bezbožníky uhlím řeřavým, ohněm a sirou, a duch vichřice bude částka kalicha jejich.
௬துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; நெருப்பும், கந்தகமும், அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7 Nebo Hospodin spravedlivý jest, spravedlnost miluje, na upřímého oči jeho patří.
௭யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.