< Príslovia 5 >
1 Synu můj, pozoruj moudrosti mé, k opatrnosti mé nakloň ucha svého,
௧என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;
2 Abys ostříhal prozřetelnosti, a rtové tvoji šetřili umění.
௨அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
3 Nebo rtové cizí ženy strdí tekou, a měkčejší nad olej ústa její.
௩ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
4 Poslední pak věci její hořké jsou jako pelyněk, ostré jako meč na obě straně ostrý.
௪அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
5 Nohy její sstupují k smrti, krokové její hrob uchvacují. (Sheol )
௫அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol )
6 Stezku života snad bys zvážiti chtěl? Vrtkéť jsou cesty její, neseznáš.
௬நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
7 Protož, synové, poslechněte mne, a neodstupujte od řečí úst mých.
௭ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
8 Vzdal od ní cestu svou, a nepřibližuj se ke dveřím domu jejího,
௮உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.
9 Abys snad nedal jiným slávy své, a let svých ukrutnému,
௯சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.
10 Aby se nenasytili cizí úsilím tvým, a práce tvá nezůstala v domě cizím.
௧0அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
11 I řval bys naposledy, když bys zhubil tělo své a čerstvost svou,
௧௧முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
12 A řekl bys: Jak jsem nenáviděl cvičení, a domlouváním pohrdalo srdce mé,
௧௨ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!
13 A neposlouchal jsem hlasu vyučujících mne, a k učitelům svým nenaklonil jsem ucha svého!
௧௩என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
14 O málo, že jsem nevlezl ve všecko zlé u prostřed shromáždění a zástupu.
௧௪சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15 Pí vodu z čisterny své, a prameny z prostředku vrchoviště svého.
௧௫உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
16 Nechť se rozlévají studnice tvé ven, a potůčkové vod na ulice.
௧௬உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
17 Měj je sám sobě, a ne cizí s tebou.
௧௭அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
18 Budiž požehnaný pramen tvůj, a vesel se z manželky mladosti své.
௧௮உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19 Laně milostné a srny utěšené; prsy její ať tě opojují všelikého času, v milování jejím kochej se ustavičně.
௧௯அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
20 Nebo proč bys se kochal, synu můj, v cizí, a objímal život postranní,
௨0என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
21 Poněvadž před očima Hospodinovýma jsou cesty člověka, a on všecky stezky jeho váží?
௨௧மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22 Nepravosti vlastní jímají bezbožníka takového, a v provazích hříchu svého uvázne.
௨௨துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
23 Takovýť umře, proto že nepřijímal cvičení, a ve množství bláznovství svého blouditi bude.
௨௩அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.