< Jób 18 >
1 Odpovídaje pak Bildad Suchský, řekl:
௧அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:
2 Dokudž neučiníte konce řečem? Pomyslte na to, a potom mluviti budeme.
௨“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
3 Proč jsme počteni za hovada? Oškliví jsme jemu, jakž sami vidíte.
௩நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
4 Ó ty, jenž hubíš život svůj zůřením svým, zdaliž pro tebe opuštěna bude země, a odsedne skála z místa svého?
௪கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
5 Anobrž světlo bezbožných uhašeno bude, aniž se blyštěti bude jiskra ohně jejich.
௫துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
6 Světlo se zatmí v stánku jeho, a lucerna jeho v něm zhasne.
௬அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
7 Ssouženi budou krokové síly jeho, a porazí jej rada jeho.
௭அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும்.
8 Nebo zapleten jest do síti nohami svými, a v zamotání chodí.
௮அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
9 Chytí ho za patu osídlo, a zmocní se ho násilník.
௯கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
10 Skrytať jest při zemi smečka jeho, a léčka jeho na stezce.
௧0அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
11 Odevšad hrůzy jej děsiti budou a dotírati na nohy jeho.
௧௧சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
12 Hladovitá bude síla jeho, a bída pohotově při boku jeho.
௧௨அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
13 Zžíře žily kůže jeho, zžíře oudy jeho kníže smrti.
௧௩அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
14 Uchváceno bude z stánku jeho doufání jeho, a to jej přivede k králi strachů.
௧௪அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
15 V stánku jeho hrůza bydleti bude, ač nebyl jeho; posypáno bude obydlí jeho sirou.
௧௫அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.
16 Od zpodku kořenové jeho uschnou, a svrchu osekány budou ratolesti jeho.
௧௬கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
17 Památka jeho zahyne z země, aniž jméno jeho slýcháno bude na ulicích.
௧௭அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
18 Vyženou ho z světla do tmy, anobrž z okršlku zemského vypudí jej.
௧௮அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
19 Nepozůstaví ani syna ani vnuka v lidu svém, ani jakého ostatku v příbytcích svých.
௧௯அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.
20 Nade dnem jeho zděsí se potomci, a přítomní strachem podjati budou.
௨0அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள்.
21 Takovýť jest zajisté způsob nešlechetného, a takový cíl toho, kterýž nezná Boha silného.
௨௧அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.