< Izaiáš 44 >
1 A však nyní slyš, Jákobe, služebníče můj, a Izraeli, kteréhož jsem vyvolil.
௧இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
2 Toto dí Hospodin, kterýž tě učinil, a sformoval hned od života matky, a spomáhá tobě: Neboj se, služebníče můj, Jákobe, a upřímý, kteréhož jsem vyvolil.
௨உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
3 Nebo vyleji vody na žíznivého, a potoky na vyprahlost; vyleji Ducha svého na símě tvé, a požehnání své na potomky tvé.
௩தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
4 I porostou jako mezi bylinami, jako vrbí vedlé tekutých vod.
௪அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்.
5 Tento dí: Hospodinův já jsem, a onen nazůve se jménem Jákobovým, a jiný zapíše se rukou svou Hospodinu, a jménem Izraelským jmenovati se bude.
௫ஒருவன், நான் யெகோவாவுடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் யெகோவாவுடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான்.
6 Takto praví Hospodin, král Izraelův a vykupitel jeho, Hospodin zástupů: Já jsem první, a já poslední, a kromě mne není žádného Boha.
௬நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்கிறார்.
7 Nebo kdo tak jako já ohlašuje a oznamuje to, aneb spořádá mi to hned od toho času, jakž jsem rozsadil lidi na světě? A kdo to, což přijíti má, oznámiti jim mohou?
௭ஆரம்பகாலத்து மக்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
8 Nebojtež se, ani lekejte. Zdali hned zdávna nepověděl jsem tobě a neoznámil, čehož vy sami mně svědkové jste? Zdaliž jest Bůh kromě mne? Neníť jistě žádné skály, jáť o žádné nevím.
௮நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கச்செய்ததும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.
9 Ti, kteříž formují rytiny, všickni nic nejsou; tolikéž ty milostné jejich nic neprospívají. Èehož ony sobě samy svědectvím jsou; nic nevidí, aniž čeho znají, aby se styděti mohly.
௯விக்கிரகங்களை உருவாக்குகிற அனைவரும் வீணர்கள்; அவர்களால் விரும்பப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
10 Kdo formuje Boha silného a rytinu slévá, k ničemu se to nehodí.
௧0ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, சிலையை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
11 Aj, všickni, i ti, kteříž se k němu přiúčastňují, zahanbeni budou, ovšem řemeslníci ti nad jiné lidi; byť se pak všickni shromáždili a postavili, strašiti se musejí, a spolu zahanbeni budou.
௧௧இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லோரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லோரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாகத் திகைத்து வெட்கப்படுவார்கள்.
12 Kovář pochytě železo, dělá při uhlí, a kladivy formuje modlu. Když ji dělá vší silou svou, ještě k tomu lační až do zemdlení, aniž se vody napije, až i ustává.
௧௨கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடிக்காமல் களைத்துப்போகிறான்.
13 Tesař roztáhna šňůru, znamenává ji hrudkou, spravuje ji úhelnicemi, a kružidlem rozměřuje ji, až ji udělá tvárnost muže mající a podobnost krásy člověka, aby seděla doma.
௧௩தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்திற்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராயத்தினால் அதை வகுத்து, மனித சாயலாக மனிதரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டிவைக்கிறான்.
14 Nasekaje sobě cedrů, vezme také cypřiš a dub aneb to, kteréž jest nejcelistvější mezi dřívím lesním; i javor štěpuje, a déšť jej k zrostu přivozuje.
௧௪அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருத மரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோக மரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15 I bývá člověku k topení; nebo vezma z něho, zhřívá se. Rozněcuje také oheň, aby napekl chleba. Mimo to udělá sobě boha, a klaní se jemu; udělá z něho rytinu, a kleká před ní.
௧௫மனிதனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டாக்கி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு சிலையையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16 Èástku jeho pálí ohněm, při druhé částce jeho maso jí, peče pečeni, a nasycen bývá. Zhřívá se také, a říká: Aha, zhřel jsem se, viděl jsem oheň.
௧௬அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்து சாப்பிட்டு, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
17 Z ostatku pak jeho udělá boha, rytinu svou, před níž kleká, a klaní se, a modlí se jí, řka: Vysvoboď mne, nebo Bůh silný můj jsi.
௧௭அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை காப்பாற்றவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18 Neznají ani soudí, proto že zaslepil oči jejich, aby neviděli, a srdce jejich, aby nerozuměli.
௧௮அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
19 Aniž považují toho v srdci svém. Není umění, není rozumu, aby kdo řekl: Díl z něho spálil jsem ohněm, a při uhlí jeho napekl jsem chleba, pekl jsem maso, a jedl jsem, a mám z ostatku jeho ohavnost udělati, a před špalkem dřevěným klekati?
௧௯அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
20 Popelem se pase takový, srdce svedené skloňuje jej, aby nemohl osvoboditi duše své, ani říci: Není-liž omylu v předsevzetí mém?
௨0அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
21 Pamatujž na to, Jákobe a Izraeli, proto že jsi ty služebník můj. Já jsem tě sformoval, služebník můj jsi, Izraeli, nebudeš u mne v zapomenutí.
௨௧யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் ஊழியக்காரன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
22 Zahladím jako hustý oblak přestoupení tvá, a jako mrákotu hříchy tvé; navratiž se ke mně, nebo jsem tě vykoupil.
௨௨உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
23 Prozpěvujte nebesa, nebo Hospodin to učinil; zvučte nižiny země, zvučně prozpěvujte hory, les i všeliké dříví v něm, nebo vykoupil Hospodin Jákoba, a v Izraeli sebe oslavil.
௨௩வானங்களே, களித்துப் பாடுங்கள்; யெகோவா இதைச் செய்தார்; பூமியின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாக முழங்குங்கள்; யெகோவா யாக்கோபைமீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
24 Takto praví Hospodin vykupitel tvůj, a ten, kterýž tě sformoval hned od života matky: Já Hospodin činím všecko, roztahuji nebesa sám, rozprostírám zemi mocí svou.
௨௪உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான யெகோவா சொல்கிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற யெகோவா; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
25 Rozptyluji znamení lhářů, a z hadačů blázny dělám; obracím moudré nazpět, a umění jejich v bláznovství.
௨௫நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர்.
26 Potvrzuji slova služebníka svého, a radu poslů svých vykonávám. Kterýž dím o Jeruzalému: Bydleno bude v něm, a o městech Judských: Vystavena budou, nebo pustiny jejich vzdělám.
௨௬நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் பிரதிநிதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான இடங்களை எடுப்பிப்பவர்.
27 Kterýž dím hlubině: Vyschni, nebo potoky tvé vysuším.
௨௭நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்கிறவர்.
28 Kterýž dím o Cýrovi: Pastýř můj, nebo všelikou vůli mou vykoná, a řekne Jeruzalému: Zase vystaven buď, a chrámu: Založen buď.
௨௮கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்கிறவர் நான்.