< 1 Mojžišova 27 >

1 Když se pak sstaral Izák, a pošly byly oči jeho, tak že neviděl, povolal Ezau syna svého staršího, a řekl jemu: Synu můj. Kterýžto odpověděl: Aj, teď jsem.
ஈசாக்கு முதிர்வயதானதால் அவனுடைய கண்கள் பார்வையிழந்தபோது, அவன் தன் மூத்த மகனாகிய ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றான்; அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.
2 I dí: Aj, já jsem se již sstaral, a nevím dne smrti své.
அப்பொழுது அவன்: “நான் முதிர்வயதானேன், எப்போது இறப்பேனென்று எனக்குத் தெரியாது.
3 Protož nyní vezmi medle nástroje své, toul svůj a lučiště své, a vyjda do pole, ulov mi zvěřinu.
ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்புகளை வைக்கும் பையையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப்போய், எனக்காக வேட்டையாடி,
4 A přistroj mi krmi chutnou, jakž já rád jídám, a přines mi, a budu jísti, aťby požehnala duše má, prvé než umru.
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள உணவுகளாகச் சமைத்து, நான் சாப்பிடவும், நான் இறப்பதற்குமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா” என்றான்.
5 (Slyšela pak Rebeka, když mluvil Izák s Ezau synem svým.) I odšel Ezau na pole, aby ulovil zvěřinu a přinesl.
ஈசாக்கு தன் மகனாகிய ஏசாவோடு பேசும்போது, ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவர காட்டுக்குப் போனான்.
6 Tedy řekla Rebeka Jákobovi synu svému takto: Aj, slyšela jsem, když otec tvůj mluvil k Ezau bratru tvému, a pravil:
அப்பொழுது ரெபெக்காள் தன் மகனாகிய யாக்கோபை நோக்கி: “உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:
7 Přines mi něco z lovu, a přistroj mi krmě chutné, abych jedl, a požehnámť před Hospodinem, prvé než umru.
நான் சாப்பிட்டு, எனக்கு மரணம் வருமுன்னே, யெகோவா முன்னிலையில் உன்னை ஆசீர்வதிக்க, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள உணவுகளாகச் சமைத்துக்கொண்டுவா” என்று சொல்வதைக்கேட்டேன்.
8 Nyní tedy, synu můj, poslechni hlasu mého v tom, což já přikazuji tobě.
ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குச் சொல்கிறபடி செய்.
9 Jdi medle k stádu, a odtud mi vezmi dva kozelce výborné, abych přistrojila z nich krmě chutné otci tvému, jakž on rád jídá.
நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள உணவுகளாகச் சமைப்பேன்.
10 A přineseš otci svému, a on jísti bude, na to, aby požehnal tobě, prvé než umře.
௧0உன் தகப்பன் தாம் இறப்பதற்குமுன்னே உன்னை ஆசீர்வதிப்பதற்கு, அவர் சாப்பிடுவதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
11 I řekl Jákob Rebece matce své: Víš, že Ezau bratr můj jest člověk chlupatý, a já jsem člověk hladký.
௧௧அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: “என் சகோதரனாகிய ஏசா அதிக ரோமமுள்ளவன், நான் ரோமமில்லாதவன்.
12 Jestliže omaká mne otec můj, tedy zůstanu u něho za podvodného; a tak uvedu na sebe zlořečenství, a ne požehnání.
௧௨ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு ஏமாற்றுகிறவனாகக் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தையே வரவழைத்துக்கொள்வேன்” என்றான்.
13 Jemužto odpověděla matka: Nechť jest na mne zlořečenství tvé, synu můj; jen ty poslechni hlasu mého, a jdi, přines mi.
௧௩அதற்கு அவனுடைய தாய்: “என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா” என்றாள்.
14 Tedy odšed, vzal, a přinesl matce své. I připravila matka jeho krmě chutné, jakž otec jeho rád jídal.
௧௪அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள்.
15 A vzala Rebeka nejlepší šaty Ezausyna svého staršího, kteréž měla u sebe v domě, a oblékla Jákoba, syna svého mladšího.
௧௫பின்பு ரெபெக்காள், வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல ஆடைகளை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
16 A kožkami kozelčími obvinula ruce jeho, a díl hladký hrdla jeho.
௧௬வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு;
17 I dala chléb a krmě chutné, kteréž připravila, v ruce Jákoba syna svého.
௧௭தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள்.
18 A on přišed k otci svému, řekl: Otče můj! Kterýžto odpověděl: Aj, teď jsem. Kdož jsi ty, synu můj?
௧௮அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே” என்றான்.
19 I dí Jákob otci svému: Já jsem Ezau, prvorozený tvůj. Učinil jsem, jakž jsi mi poručil. Vstaň, prosím, sedni a jez z lovu mého, aby mi požehnala duše tvá.
௧௯அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான்.
20 Tedy řekl Izák synu svému: Což to? Brzys to nalezl, synu můj. A on dí: Nebo Hospodin Bůh tvůj způsobil to, aby mi se pojednou nahodilo.
௨0அப்பொழுது ஈசாக்கு தன் மகனை நோக்கி: “என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாக எப்படி கிடைத்தது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய யெகோவா எனக்குக் கிடைக்கச்செய்தார்” என்றான்.
21 I řekl Izák Jákobovi: Přistupiž, ať omakám tě, synu můj, ty-li jsi syn můj Ezau, či nejsi.
௨௧அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: “என் மகனே, நீ என் மகனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்க அருகில் வா” என்றான்.
22 Tedy přistoupil Jákob k Izákovi otci svému; a on omakal ho, i řekl: Hlas jest hlas Jákobův, ale ruce tyto ruce Ezau.
௨௨யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கினருகில் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: “சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள்” என்று சொல்லி,
23 A nepoznal ho; nebo byly ruce jeho, jako ruce Ezau bratra jeho, chlupaté. I požehnal mu.
௨௩அவனுடைய கைகள் அவனுடைய சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாக இருந்ததால், யாரென்று தெரியாமல், அவனை ஆசீர்வதித்து,
24 A řekl: Ty-liž jsi pak syn můj Ezau? Odpověděl: Já.
௨௪“நீ என் மகனாகிய ஏசாதானோ” என்றான்; அவன்: “நான்தான்” என்றான்.
25 I řekl: Podejž mi, ať jím z lovu syna svého, aby tobě požehnala duše má. Tedy podal mu, a on jedl. Přinesl mu také vína, a on pil.
௨௫அப்பொழுது அவன்: “என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா” என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சைரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
26 I řekl jemu Izák otec jeho: Přistupiž nyní, a polib mne, synu můj.
௨௬அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.
27 I přistoupil a políbil ho. A jakž ucítil Izák vůni roucha jeho, požehnal mu, řka: Pohleď, vůně syna mého jest jako vůně pole, jemuž požehnal Hospodin.
௨௭அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: “இதோ, என் மகனுடைய வாசனை யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது.
28 Dejž tobě Bůh z rosy nebeské, a z tučnosti zemské, i hojnost obilé a vína.
௨௮தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக.
29 Nechažť slouží tobě lidé, a sklánějí se před tebou národové. Budiž pánem bratří svých, a ať se sklánějí před tebou synové matky tvé. Kdož by zlořečili tobě, nechť jsou zlořečení, a kdo by dobrořečili tobě, požehnaní.
௨௯மக்கள் உன்னைச் சேவித்து தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
30 A když přestal Izák požehnání dávati Jákobovi, a sotva že vyšel Jákob od Izáka otce svého, Ezau bratr jeho přišel z lovu svého.
௩0ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.
31 A připraviv i on krmě chutné, přinesl otci svému a řekl mu: Nechžť vstane otec můj, a jí z lovu syna svého, aby mi požehnala duše tvá.
௩௧அவனும் ருசியுள்ள உணவுகளைச் சமைத்து, தன் தகப்பனிடம் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: “உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்க, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய மகனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிடும்” என்றான்.
32 I řekl jemu Izák otec jeho: Kdo jsi ty? Dí on: Já jsem syn tvůj, prvorozený tvůj Ezau.
௩௨அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு: “நீ யார்” என்றான்; அதற்கு அவன்: “நான் உமது மூத்த மகனாகிய ஏசா” என்றான்.
33 Tedy zhrozil se Izák hrůzou velikou náramně, a řekl: Kdo pak a kde jest ten, ješto uloviv zvěřinu, přinesl mi? A já jsem jedl ze všeho, prvé než jsi ty přišel, a požehnal jsem mu, a budeť požehnaným.
௩௩அப்பொழுது ஈசாக்கு மிகவும் அதிர்ச்சியடைந்து நடுங்கி: “வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருவதற்குமுன்னே அவைகளையெல்லாம் நான் சாப்பிட்டு அவனை ஆசீர்வதித்தேனே, அவனே ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்” என்றான்.
34 Uslyšev Ezau slova otce svého, zkřikl hlasem velikým, a hořkostí naplněn jest náramně, a řekl otci svému: Požehnejž mně, i mně také, můj otče!
௩௪ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனமுடைந்து அதிக சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும்” என்றான்.
35 Kterýžto řekl: Přišel bratr tvůj podvodně a uchvátil požehnání tvé.
௩௫அதற்கு அவன்: “உன் சகோதரன் தந்திரமாக வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான்” என்றான்.
36 Tedy řekl: Právětě nazváno jméno jeho Jákob; nebo již po dvakráte mne podvedl, prvorozenství mé odjal, a teď nyní uchvátil požehnání mé. Řekl ještě: Zdali jsi nezachoval i mně požehnání?
௩௬அப்பொழுது அவன்: “அவனுடைய பெயர் யாக்கோபு என்பது சரியல்லவா? இதோடு இரண்டுமுறை என்னை ஏமாற்றினான்; என் பிறப்புரிமையை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான்” என்று சொல்லி, “நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாவது வைத்திருக்கவில்லையா” என்றான்.
37 Odpověděl Izák a řekl k Ezau: Aj, ustavil jsem ho pánem nad tebou, a všecky bratří jeho dal jsem mu za služebníky; obilím také a vínem opatřil jsem ho. Což tedy již tobě učiniti mohu, synu můj?
௩௭ஈசாக்கு ஏசாவுக்கு மறுமொழியாக: “இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவனுடைய சகோதரர்கள் எல்லோரையும் அவனுக்கு வேலைக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சைரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான்.
38 I řekl Ezau otci svému: Zdaliž to jedno toliko máš požehnání, otče můj? Požehnejž mně, i mně také, můj otče! I povýšil Ezau hlasu svého a plakal.
௩௮ஏசா தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி”, ஏசா சத்தமிட்டு அழுதான்.
39 Tedy odpověděl Izák otec jeho, a řekl k němu: Aj, v tučnostech země bude bydlení tvé a v rose nebeské s hůry;
௩௯அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக: “உன் குடியிருப்பு பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.
40 A v meči svém živ budeš, a bratru svému sloužiti budeš; ale přijde čas, že budeš panovati a svržeš jho jeho s šíje své.
௪0உன் ஆயுதத்தால் நீ பிழைத்து, உன் சகோதரனுக்குப் பணிவிடை செய்வாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் மேலிருக்கிற அவனுடைய ஆளுகையை உடைத்துப்போடுவாய்” என்றான்.
41 Protož v nenávisti měl Ezau Jákoba pro požehnání, jímž požehnal mu otec jeho, a řekl v srdci svém: Přiblížiť se dnové smutku otce mého, a zabiji Jákoba, bratra svého.
௪௧யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: “என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன்” என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.
42 I oznámena jsou Rebece slova Ezau, staršího syna jejího. Pročež ona poslavši, povolala Jákoba syna svého mladšího, a řekla jemu: Hle, Ezau bratr tvůj těší se tím, že tě zabije.
௪௨மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: “உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.
43 Protož nyní, synu můj, poslechni hlasu mého, a vstana, utec k Lábanovi, bratru mému do Cháran.
௪௩ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப்போய்,
44 A pobuď s ním za některý čas, až by se odvrátila prchlivost bratra tvého,
௪௪உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு.
45 A přestalo rozhněvání bratra tvého na tebe, a zapomenul by na to, což jsi mu učinil. Potom já pošli a vezmu tě odtud. Proč mám zbavena býti obou synů jednoho dne?
௪௫உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும்” என்றாள்.
46 I řekla Rebeka Izákovi: Stýště mi se živu býti pro dcery Het. Vezme-li Jákob ženu ze dcer Het, jako tyto jsou ze dcer země této, k čemu mi život?
௪௬பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: “ஏத்தின் பெண்களால் என் வாழ்க்கை எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் பெண்களில் யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் என் உயிர் இருந்து என்ன பயன்” என்றாள்.

< 1 Mojžišova 27 >