< Ezechiel 7 >

1 Potom stalo se slovo Hospodinovo ke mně, řkoucí:
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 Slyš, synu člověčí: Takto praví Panovník Hospodin o zemi Izraelské: Ach, skončení, přišlo skončení její na čtyři strany země.
மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து முடிவு வருகிறது, தேசத்தின் நான்கு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
3 Jižtě skončení nastalo tobě; nebo vypustím hněv svůj na tě, a budu tě souditi podlé cest tvých, a uvrhu na tě všecky ohavnosti tvé.
இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என்னுடைய கோபத்தை உன்மேல் வரச்செய்து, உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.
4 Neodpustí zajisté oko mé tobě, aniž se slituji, ale cesty tvé na tebe uvrhu, a ohavnosti tvé u prostřed tebe budou. I zvíte, že já jsem Hospodin.
என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புகளுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
5 Takto praví Panovník Hospodin: Bída jedna, aj hle, přichází bída.
உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது.
6 Skončení přichází, přichází skončení, procítil na tě, aj, přicházíť.
முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாக இருக்கிறது; இதோ, வருகிறது.
7 Přicházíť to jitro na tebe, obyvateli země, přicházíť ten čas, přibližuje se ten den hřmotu, a ne hlas rozléhající se po horách.
தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்த நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அழிவின் நாள் அருகிலிருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
8 Již tudíž vyliji prchlivost svou na tě, a docela vypustím hněv svůj na tebe, a budu tě souditi podlé cest tvých, a uvrhu na tě všecky ohavnosti tvé.
இப்பொழுது விரைவில் என்னுடைய கடுங்கோபத்தை உன்மேல் ஊற்றி, என்னுடைய கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.
9 Neodpustíť zajisté oko mé, aniž se slituji, ale podlé cest tvých zaplatím tobě, a budou ohavnosti tvé u prostřed tebe. A tak zvíte, že já jsem Hospodin, ten, kterýž biji.
என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புக்களுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
10 Aj, teď jest ten den, aj, přicházeje, přišlo to jitro, zkvetl prut, vypučila se z něho pýcha,
௧0இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது, கோல் பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
11 Ukrutnost vzrostla v prut bezbožnosti. Nezůstaneť z nich nic, ani z množství jejich, ani z hluku jejich, aniž bude naříkáno nad nimi.
௧௧அக்கிரமமானது கொடுமையின் கோலாக எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கூட்டத்திலும் அவர்களுடைய அழிவிலும் ஒன்றும் மீதியாக இருப்பதில்லை; அவர்களுக்காக புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
12 Přicházíť ten čas, blízko jest ten den. Kdo koupí, nebude se veseliti, a kdo prodá, nic toho nebude litovati; nebo prchlivost přijde na všecko množství její.
௧௨அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும்.
13 Ten zajisté, kdož prodal, k věci prodané nepůjde nazpět, by pak ještě byl mezi živými život jejich, poněvadž vidění na všecko množství její nenavrátí se, a žádný v nepravosti života svého nezmocní se.
௧௩அவர்கள் உயிருள்ளவர்களுக்குள்ளே இன்னும் உயிரோடு இருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன்னுடைய அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான்.
14 Troubiti budou v troubu, a připraví všecko, ale nebude žádného, kdo by šel k boji; nebo prchlivost má oboří se na všecko množství její.
௧௪அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்செய்தும், போருக்குப் போகிறவன் இல்லை; என்னுடைய கடுங்கோபம் அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் இறங்குகிறது.
15 Meč bude vně, mor pak a hlad doma; kdo bude na poli, mečem zabit bude, toho pak, kdož bude v městě, hlad a mor zahubí.
௧௫வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் வாளால் மரிப்பான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் சாப்பிடும்.
16 Kteříž pak z nich utekou, ti na horách, jako holubice v údolí, všickni lkáti budou, jeden každý pro nepravost svou.
௧௬அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
17 Všeliké ruce klesnou, a všeliká kolena rozplynou se jako voda.
௧௭எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
18 I přepáší se žíněmi, a hrůza je přikryje, a na všeliké tváři bude stud, a na všech hlavách jejich lysina.
௧௮சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும்.
19 Stříbro své po ulicích rozházejí, a zlato jejich bude jako nečistota; stříbro jejich a zlato jejich nebude jich moci vysvoboditi v den prchlivosti Hospodinovy. Nenasytí se, a střev svých nenaplní, proto že nepravost jejich jest jim k urážce,
௧௯தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது.
20 A že v slávě okrasy své, v té, kterouž k důstojnosti postavil Bůh, obrazu ohavností svých a mrzkostí svých nadělali. Protož obrátil jsem jim ji v nečistotu.
௨0அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கு என்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீ என்று இகழப்படத்தக்கதுமான காரியங்களின் சிலைகளை உண்டாக்கினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
21 Nebo vydám ji v ruku cizozemců k rozchvátání, a bezbožným na zemi za loupež, kteříž poškvrní jí.
௨௧அதை அந்நியர்களின் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துன்மார்க்களுக்கு சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
22 Odvrátím též tvář svou od nich, i poškvrní svatyně mé, a vejdou do ní, boříce a poškvrňujíce jí.
௨௨என்னுடைய முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என்னுடைய மறைவான இடத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; கொள்ளைக்காரர்கள் அதற்குள் நுழைந்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
23 Udělej řetěz, nebo země plná jest soudů ukrutných, a město plné jest nátisku.
௨௩ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
24 Protož přivedu nejhorší z pohanů, aby dědičně vládli domy jejich; i učiním přítrž pýše silných, a poškvrněny budou, kteříž jich posvěcují.
௨௪ஆகையால் அந்நியதேசங்களின் துன்மார்க்கர்களை வரச்செய்வேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியச்செய்வேன், அவர்களுடைய பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
25 Zkažení přišlo, protož hledati budou pokoje, ale žádného nebude.
௨௫அழிவு வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடைக்காது.
26 Bída za bídou přijde, a novina bude za novinou, i budou hledati vidění od proroka, ale zákon zahyne od kněze, a rada od starců.
௨௬அழிவின்மேல் அழிவு வரும்; தீயசெய்தியின்மேல் தீயசெய்தி வரும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்தில் தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இல்லாமல் ஒழிந்துபோகும்.
27 Král ustavičně kvíliti bude, a kníže obleče se v smutek, a ruce lidu v zemi předěšeny budou. Podlé cesty jejich učiním jim, a podlé soudů jejich souditi je budu. I zvědí, že já jsem Hospodin.
௨௭ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைப் பயம் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து, மக்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உன்னதமான தேவன் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

< Ezechiel 7 >