< Ezechiel 30 >
1 Opět se stalo slovo Hospodinovo ke mně, řkoucí:
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 Synu člověčí, prorokuj a rci: Takto praví Panovník Hospodin: Kvělte: Ach, nastojte na tento den.
௨மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ, ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
3 Nebo blízko jest den, blízko jest, pravím, den Hospodinův, den mrákoty, čas národů bude.
௩நாள் அருகில் இருக்கிறது; ஆம், யெகோவாவுடைய நாள் அருகில் இருக்கிறது; அது மந்தாரமான நாள், அது அந்நியஜாதிகளுக்கு வரும் காலம்.
4 A přijde meč do Egypta, a bude přetěžká bolest v Mouřenínské zemi, když padati budou zbití v Egyptě, a poberou zboží jeho, a zbořeni budou základové jeho.
௪வாள் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலை செய்யப்படுகிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான மக்களைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் பாழாக்கப்படும்.
5 Mouřenínové a Putští i Ludští i všelijaká směsice, též Kubští i obyvatelé země smlouvy s nimi mečem padnou.
௫எத்தியோப்பியர்களும், பூத்தியர்களும், லூதியர்களும், கலந்த கூட்டமாகிய அனைவரும், லிபியர்களும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் மக்களும் அவர்களுடன் கூட வாளால் விழுவார்கள்.
6 Takť praví Hospodin, že padnou podpůrcové Egypta, a snížena bude vyvýšenost síly jeho; od věže Sevéne mečem padati budou v ní, praví Panovník Hospodin.
௬எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று யெகோவா சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் வாளினால் விழுவார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
7 I budou v pustinu obráceni nad jiné země pusté, a města jejich nad jiná města pustá budou.
௭பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அழிக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அழிக்கப்படும்.
8 I zvědí, že já jsem Hospodin, když zapálím oheň v Egyptě, a potříni budou všickni pomocníci jeho.
௮நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
9 V ten den vyjdou poslové od tváři mé na lodech, aby přestrašili Mouřenínskou zemi ubezpečenou, i budou míti bolest přetěžkou, jakáž byla ve dni Egypta; nebo aj, přicházíť.
௯இருமாப்புள்ள எத்தியோப்பியரைத் தத்தளிக்கச்செய்து அந்த நாளிலே என்னுடைய கட்டளையினால் தூதுவர்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
10 Takto praví panovník Hospodin: Učiním zajisté konec množství Egyptskému skrze ruku Nabuchodonozora krále Babylonského.
௧0யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன்.
11 On i lid jeho s ním, nejukrutnější národové přivedeni budou, aby zkazili tu zemi; nebo vytrhnou meče své na Egypt, a naplní tu zemi zbitými.
௧௧இவனும் இவனோடு கூடத் தேசங்களில் மகா பலசாலிகளான இவனுடைய மக்களும் தேசத்தை அழிப்பதற்காக தூண்டப்பட்டு வந்து, தங்களுடைய வாள்களை எகிப்திற்கு விரோதமாக உருவி, கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
12 A obrátě řeky v sucho, prodám tu zemi v ruku nešlechetných, a tak v pustinu uvedu zemi, i což v ní jest, skrze ruku cizozemců. Já Hospodin mluvil jsem.
௧௨அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகச்செய்து, தேசத்தைப் பொல்லாதவர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன்.
13 Takto praví Panovník Hospodin: Zkazím i ukydané bohy, a konec učiním modlám v Nof, a knížete z země Egyptské nebude více, když pustím strach na zemi Egyptskou.
௧௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அசுத்தமான சிலைகளை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியச்செய்வேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இருக்கமாட்டான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
14 Nebo pohubím Patros, a zapálím oheň v Soan, a vykonám soudy v No.
௧௪பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தைத் தண்டித்து,
15 Vyleji prchlivost svou i na Sin, pevnost Egyptskou, a vypléním množství No.
௧௫எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என்னுடைய கடுங்கோபத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான மக்களை வெட்டிப்போடுவேன்.
16 Když zapálím oheň v Egyptě, velikou bolest bude míti Sin, a No bude roztrháno, Nof pak nepřátely bude míti ve dne.
௧௬எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்கு அனுதினமும் நெருக்கங்கள் உண்டாகும்.
17 Mládenci On a Bubastští mečem padnou, panny pak v zajetí půjdou.
௧௭ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர்கள் வாளால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
18 A v Tachpanches zatmí se den, když tam polámi závory Egypta, a přítrž se stane v něm vyvýšenosti síly jeho. Mrákota jej přikryje, dcery pak jeho v zajetí půjdou.
௧௮எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், இருள் அதை மூடும்; தகபானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் மகள்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
19 A tak vykonám soudy při Egyptu, i zvědí, že já jsem Hospodin.
௧௯இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
20 Opět bylo jedenáctého léta, prvního měsíce, sedmého dne, že se stalo slovo Hospodinovo ke mně, řkoucí:
௨0பதினோராம் வருடம் முதலாம் மாதம் ஏழாம் நாளிலே, யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21 Synu člověčí, rámě Faraona krále Egyptského zlámal jsem, a aj, nebudeť uvázáno, ani přičiněno lékařství, aniž přiložen bude šat pro obvázání jeho a posilnění jeho k držení meče.
௨௧மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாவதற்காகக் கட்டப்படுவதில்லை; அது வாளைப் பிடிக்கும் அளவுக்கு பெலன்பெற பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.
22 Protož takto praví panovník Hospodin: Aj, já jsem proti Faraonovi králi Egyptskému, a polámi ramena jeho, i sílu jeho, i budeť zlámané, a vyrazím meč z ruky jeho.
௨௨ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; வாளை நான் அவன் கையிலிருந்து விழச்செய்து,
23 A rozptýlím Egyptské mezi národy, a rozženu je do zemí.
௨௩எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
24 Posilním zajisté ramen krále Babylonského, a dám meč svůj v ruku jeho, i polámi ramena Faraonova, tak že stonati bude před ním, jakž stonává smrtelně raněný.
௨௪பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்தி, அவனுடைய கையிலே என்னுடைய வாளைக் கொடுத்து, பார்வோனின் கைகளை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலை செய்யப்பட்டு தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
25 Posilním, pravím, ramen krále Babylonského, ramena pak Faraonova klesnou. I zvědí, že já jsem Hospodin, když dám meč svůj v ruku krále Babylonského, aby jej vztáhl na zemi Egyptskou.
௨௫பாபிலோன் ராஜாவின் கைகளைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் கைகளோ விழுந்துபோகும்; என்னுடைய வாளை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
26 A tak rozptýlím Egyptské mezi národy, a rozženu je do zemí, i zvědí, že já jsem Hospodin.
௨௬நான் எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.