< 2 Mojžišova 11 >
1 Řekl pak byl Hospodin Mojžíšovi: Ještě ránu jednu uvedu na Faraona a na Egypt, potom propustí vás odsud; propustí docela, anobrž vypudí vás odsud.
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான்; அதுவுமன்றி, உங்களை முழுவதும் துரத்தியும் விடுவான்.
2 Mluv nyní v uši lidu, ať vypůjčí jeden každý od bližního svého, a každá od bližní své klínotů stříbrných a klínotů zlatých.
ஆண்களும் பெண்களும் வேறுபாடின்றி தங்களுடைய அயலவர்களிடத்தில் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார்.
3 A dal Hospodin milost lidu před očima Egyptských. (Sám také Mojžíš veliký byl velmi v zemi Egyptské, před očima služebníků Faraonových i před očima lidu.)
யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார். அதுவுமன்றி, மோசே எகிப்திலே பார்வோனின் அதிகாரிகளாலும், எகிப்திய மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டான்.
4 I řekl Mojžíš: Takto praví Hospodin: O půlnoci já půjdu prostředkem Egypta.
அப்பொழுது மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுவே: ‘நான் நடு இராத்திரியளவில் எகிப்து எங்கும் கடந்துபோவேன்.
5 A pomře všecko prvorozené v zemi Egyptské, od prvorozeného Faraonova, jenž seděti měl na stolici jeho, až do prvorozeného děvky, kteráž jest při žernovu, i všecko prvorozené hovad.
எகிப்தில் முதற்பேறான ஒவ்வொரு மகனும் சாவான். அரியணையில் இருக்கும் பார்வோனின் முதல் ஆண்பிள்ளைமுதல், திரிகை ஆட்டும் அடிமைப்பெண்ணின் முதல் ஆண்பிள்ளை வரையுள்ள முதல் பிறந்த எல்லா மகன்களும் சாவார்கள்; அத்துடன் மிருகங்களின் தலையீற்றுகள் அனைத்தும் சாகும்.
6 I bude křik veliký po vší zemi Egyptské, jakéhož nebylo prvé, a jakéhož nikdy nebude více.
எகிப்து நாடெங்கும் முன்பும் பின்பும் இனி ஒருபோதும் இருக்காத பெரிய அழுகுரல் உண்டாகும்.
7 U synů pak Izraelských nikdež nehne pes jazykem svým, ovšem pak ani člověk ani hovado, abyste věděli, že rozdíl učinil Hospodin mezi Egyptskými a Izraelskými.
ஆனால் இஸ்ரயேலர் மத்தியில் மனிதரையோ, மிருகங்களையோ பார்த்து ஒரு நாயாவது குரைக்கமாட்டாது.’ இதனால் யெகோவா எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே வித்தியாசத்தைக் காட்டுகிறார் என்பதை நீ அறிந்துகொள்வாய்.
8 I sstoupí všickni tito služebníci tvoji ke mně, a skláněti mi se budou, řkouce: Vyjdi, ty i všecken lid, kterýž jest pod správou tvou; a potom vyjdu. A vyšel od Faraona s velikým hněvem.
அப்பொழுது உம்முடைய அதிகாரிகள் எல்லோரும் என்முன் பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போங்கள்!’ என்று சொல்வார்கள். அதன்பின் நான் புறப்படுவேன்” என்று சொல்லி மோசே கடுங்கோபத்துடன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.
9 I řekl Hospodin Mojžíšovi: Neposlechneť vás Farao, abych rozmnožil zázraky své v zemi Egyptské.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மறுப்பான். இதினிமித்தம் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார்.
10 Ale Mojžíš a Aron činili všecky ty zázraky před Faraonem; Hospodin pak zatvrdil srdce Faraonovo, tak že nepropustil synů Izraelských z země své.
இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள், ஆனாலும் பார்வோனின் இருதயத்தை யெகோவா கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை.