< 2 Tesalonickým 1 >
1 Pavel a Silván a Timoteus církvi Tessalonicenské v Bohu Otci našem a v Pánu Ježíši Kristu:
௧பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
2 Milost vám a pokoj od Boha Otce našeho a od Pána Jezukrista.
௨நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 Povinniť jsme díky činiti Bohu vždycky z vás, bratří, tak jakž hodné jest, protože velmi roste víra vaše a rozmáhá se láska jednoho každého z vás, všechněch k sobě vespolek,
௩சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது.
4 Takže my se vámi v sbořích Božích chlubíme, vaší trpělivostí a věrou ve všech protivenstvích a souženích, kteráž snášíte;
௪நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
5 Kterážto jsou zjevný důvod spravedlivého soudu Božího, abyste tak za hodné jmíni byli království Božího, pro něž i trpíte,
௫நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது.
6 Poněvadž spravedlivé jest u Boha, aby zase odplaceno bylo těm, kteříž vás sužují, soužením,
௬உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.
7 Vám pak, úzkost trpícím, aby dáno bylo odpočinutí s námi, při zjevení Pána Ježíše s nebe, s anděly moci jeho,
௭தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு,
8 V plameni ohně, kterýž pomstu uvede na ty, jenž neznají Boha a neposlouchají evangelium Pána našeho Jezukrista,
௮கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
9 Kteříž pomstu ponesou, věčné zahynutí, zahnáni jsouce od tváři Páně a od slávy moci jeho, (aiōnios )
௯அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும்,
10 Když přijde, aby oslaven byl v svatých svých a předivný ukázal se ve všech věřících, (nebo uvěřeno jest svědectví našemu u vás, ) v onen den.
௧0அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (aiōnios )
11 Pročež i modlíme se vždycky za vás, aby vás hodné učiniti ráčil povolání toho Bůh náš a vyplnil všecku dobře libou vůli dobrotivosti své, i skutek víry mocně,
௧௧ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;
12 Aby oslaveno bylo jméno Pána našeho Jezukrista v vás a vy v něm, podle milosti Boha našeho a Pána Jezukrista.
௧௨நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.