< 2 Královská 1 >

1 V tom zprotivil se Moáb Izraelovi po smrti Achabově.
ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள்.
2 A Ochoziáš spadl skrze mříži paláce svého letního, kterýž byl v Samaří, a stonal. I poslal posly, řka jim: Jděte, pilně se ptejte Belzebuba, boha Akaron, povstanu-li z nemoci této?
அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் ஜன்னலிலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
3 Ale anděl Hospodinův řekl Eliášovi Tesbitskému: Vstana, jdi vstříc poslům krále Samařského a mluv k nim: Zdali není Boha v Izraeli, že jdete dotazovati se Belzebuba, boha Akaron?
யெகோவாவுடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?
4 Protož takto praví Hospodin: S ložce, na kterémžs se složil, nesejdeš, ale jistotně umřeš. I odšel Eliáš.
இதனால் நீ ஏறிப்படுத்த கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.
5 A když se navrátili poslové k němu, řekl jim: Pročež jste se zase vrátili?
அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான்.
6 Odpověděli jemu: Muž nějaký vyšel nám v cestu a řekl nám: Jděte, navraťte se k králi, kterýž vás poslal, a rcete jemu: Takto praví Hospodin: Zdali není Boha v Izraeli, že ty posíláš tázati se Belzebuba, boha Akaron? Protož s ložce, na kterémžs se složil, nesejdeš, ale jistotně umřeš.
அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.
7 I řekl jim: Jaký jest způsob muže toho, kterýž vám vstříc vyšel a mluvil vám ty řeči?
அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான்.
8 Kteříž odpověděli jemu: Jest člověk chlupatý, a pasem koženým přepásán na bedrách svých. Tedy řekl: Eliáš Tesbitský jest.
அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;
9 Protož poslal pro něj padesátníka s padesáti jeho. Kterýž šel k němu, a aj, seděl na vrchu hory. I řekl jemu: Muži Boží, král rozkázal, abys sstoupil dolů.
அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.
10 Odpovídaje Eliáš, řekl padesátníku: Jestliže jsem muž Boží, nechť sstoupí oheň s nebe, a sžíře tě i tvých padesát. A tak sstoupil oheň s nebe, a sežral jej i padesát jeho.
௧0அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
11 Opět poslal k němu král padesátníka jiného s padesáti jeho. Kterýž mluvil a řekl jemu: Muži Boží, takto rozkázal král: Rychle sstup dolů.
௧௧மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான்.
12 I odpověděl Eliáš a řekl jim: Jestliže jsem muž Boží, nechť sstoupí oheň s nebe, a sžíře tě i tvých padesát. A tak sstoupil oheň Boží s nebe, a sežral jej i padesát jeho.
௧௨எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது.
13 Ještě poslal padesátníka třetího s padesáti jeho. Pročež vstoupiv, přišel ten třetí padesátník, a klekl na kolena svá před Eliášem, a prose ho pokorně, řekl jemu: Muži Boží, prosím, nechť jest drahá duše má i duše služebníků tvých padesáti těchto před očima tvýma.
௧௩மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.
14 Aj, oheň sstoupiv s nebe, sežral dva první padesátníky s padesáti jejich, ale nyní nechť jest drahá duše má před očima tvýma.
௧௪இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.
15 Řekl pak anděl Hospodinův Eliášovi: Sstup s ním, neboj se nic tváři jeho. Tedy vstav, šel s ním k králi.
௧௫அப்பொழுது யெகோவாவுடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய்,
16 A mluvil jemu: Takto praví Hospodin: Proto že jsi poslal posly tázati se Belzebuba, boha Akaron, (jako by nebylo Boha v Izraeli, abys se tázal slova jeho), protož s ložce, na kterémžs se složil, nesejdeš, ale jistotně umřeš.
௧௬அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
17 I umřel podlé řeči Hospodinovy, kterouž mluvil Eliáš, a kraloval Joram místo něho léta druhého Jehorama syna Jozafatova, krále Judského; nebo on neměl syna.
௧௭எலியா சொன்ன யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
18 O jiných pak věcech Ochoziášových, kteréž činil, zapsáno jest v knize o králích Izraelských.
௧௮அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

< 2 Královská 1 >