< 1 Kronická 14 >

1 Potom poslal Chíram král Tyrský posly k Davidovi, a dříví cedrového a zedníky i tesaře, aby stavěli jemu dům.
தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.
2 I poznal David, že ho potvrdil Hospodin za krále nad Izraelem, a že zvýšil království jeho pro lid svůj Izraelský.
யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
3 Pojal pak David ještě ženy v Jeruzalémě, a zplodil David více synů a dcer.
எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
4 A tato jsou jména těch, kteříž se jemu zrodili v Jeruzalémě: Sammua, Sobab, Nátan a Šalomoun,
எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
5 Též Ibchar, Elisua, Elfelet,
இப்பார், எலிசூவா, எல்பெலேத்,
6 Za tím Noga, Nefeg, Jafia,
நோகா, நெப்பேக், யப்பியா,
7 Elisama, Beeliada a Elifelet.
எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
8 V tom uslyšavše Filistinští, že by pomazán byl David za krále nade vším Izraelem, vytáhli všickni Filistinští hledati Davida. O čemž uslyšav David, vytáhl proti nim.
தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.
9 Nebo když Filistinští přišli, a rozprostřeli se v údolí Refaim,
பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
10 Radil se David s Bohem, řka: Potáhnu-li proti Filistinským, a dáš-li je v ruku mou? Odpověděl jemu Hospodin: Táhni, a dám je v ruku tvou.
௧0பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
11 Tedy vtrhli do Balperazim. I porazil je tam David a řekl: Protrhlť jest Bůh nepřátely mé rukou mou, jako vody protrhují břehy. A protož nazváno jméno místa toho Balperazim.
௧௧அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.
12 Nebo nechali tam bohů svých. I přikázal David, aby je spálili.
௧௨அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
13 Ale Filistinští sebravše se znovu, rozprostřeli se v tom údolí.
௧௩பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
14 Pročež David radil se opět s Bohem. I řekl jemu Bůh: Nepřistupuj k nim po zadu; odvrať se od nich, abys na ně trefil naproti moruším.
௧௪அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
15 A když uslyšíš, že šustí vrchové moruší, tedy vytáhneš k bitvě; nebo vyšel Bůh před tebou, aby porazil vojska Filistinská.
௧௫முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
16 I učinil David tak, jakž mu byl přikázal Bůh, a porazili vojska Filistinská od Gabaon až do Gázera.
௧௬தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
17 A tak rozešla se pověst o Davidovi do všech zemí, a způsobil Hospodin to, že se ho báli všickni národové.
௧௭அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.

< 1 Kronická 14 >