< Žalmy 53 >

1 Přednímu z kantorů na machalat, vyučující žalm Davidův. Říká blázen v srdci svém: Není Boha. Porušeni jsou, a ohavnou páší nepravost; není, kdo by činil dobré.
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 Bůh s nebe popatřil na syny lidské, aby viděl, byl-li by kdo rozumný a hledající Boha.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
3 Aj, každý z nich nazpět odšel, napořád neužiteční učiněni jsou; není, kdo by činil dobré, není ani jednoho.
அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4 Zdaliž nevědí všickni činitelé nepravosti, lid můj sžírajíce, jako by chléb jedli? Boha pak nevzývají.
அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
5 Tuť se náramně strašiti budou, kdež není strachu. Bůh zajisté rozptýlí kosti těch, kteříž tě vojensky oblehli; zahanbíš je, nebo Bůh pohrdl jimi.
உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6 Ó by z Siona dáno bylo spasení Izraelovi. Když Bůh zase přivede zajaté lidu svého, plésati bude Jákob, a veseliti se Izrael.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

< Žalmy 53 >