< Žalmy 48 >
1 Píseň žalmu synů Chóre. Veliký jest Hospodin, a převelmi chvalitebný v městě Boha našeho, na hoře svatosti své.
கோராகியரின் சங்கீதப் பாட்டு. யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 Ozdoba krajiny, útěcha vší země jestiť hora Sion, k straně půlnoční, město krále velikého.
சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது மகா அரசரின் நகரம்.
3 Bůh na palácích jeho, a znají ho býti vysokým hradem.
இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.
4 Nebo aj, králové když se shromáždili a spolu táhli,
அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது,
5 Sami to uzřevše, velmi se divili, a předěšeni byvše, náhle utíkali.
சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து தப்பி ஓடினார்கள்.
6 Tuť jest je strach popadl, a bolest jako ženu rodící.
அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது.
7 Větrem východním rozrážíš lodí Tarské.
யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.
8 Jakž jsme slýchali, tak jsme spatřili, v městě Hospodina zástupů, v městě Boha našeho. Bůh upevní je až na věky.
நாம் கேள்விப்பட்டது போலவே, சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் நாம் கண்டும் இருக்கிறோம்: இறைவன் அந்தப் பட்டணத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.
9 Rozjímáme, ó Bože, milosrdenství tvé u prostřed chrámu tvého.
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.
10 Jakož jméno tvé, Bože, tak i chvála tvá až do končin země; pravice tvá zajisté plná jest spravedlnosti.
இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
11 Raduj se, horo Sione, plésejte, dcery Judské, z příčiny soudů Božích.
உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.
12 Obejděte Sion, a obstupte jej, sečtěte věže jeho.
சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள்.
13 Přiložte mysl svou k ohradě, popatřte na paláce jeho, abyste uměli vypravovati věku potomnímu,
அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லும்படி, அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.
14 Že tento Bůh jest Bůh náš na věčné věky, a že on vůdce náš bude až do smrti.
ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.