< Žalmy 149 >
1 Halelujah. Zpívejte Hospodinu píseň novou, chválu jeho v shromáždění svatých.
௧அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
2 Vesel se Izrael v tom, kterýž ho učinil, synové Sionští plésejte v králi svém.
௨இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
3 Chvalte jméno jeho na píšťalu, na buben a na citaru prozpěvujte jemu.
௩அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
4 Nebo zalíbilo se Hospodinu v lidu jeho; onť ozdobuje pokorné spasením.
௪யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
5 Plésati budou svatí v Boží slávě, a zpívati v pokojích svých.
௫பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
6 Oslavování Boha silného bude ve rtech jejich, a meč na obě straně ostrý v rukou jejich,
௬தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
7 K vykonávání pomsty nad pohany, a k strestání národů,
௭அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
8 K svazování králů jejich řetězy, a šlechticů jejich pouty železnými,
௮அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
9 K nakládání s nimi podlé práva zapsaného, k slávě všechněm svatým jeho. Halelujah.
௯இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.