< 3 Mojžišova 2 >

1 Když by pak který člověk obětoval dar oběti suché Hospodinu, mouka bělná bude obět jeho. I poleje ji olejem a vloží na ni kadidlo.
“ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
2 Přinese ji pak k synům Aronovým kněžím, a vezme odtud plnou hrst svou té mouky bělné a toho oleje se vším kadidlem jejím; i páliti to bude kněz na památku její na oltáři v obět ohnivou, vůně spokojující Hospodina.
அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
3 Ostatek pak té oběti suché bude Aronovi i synům jeho, svaté svatých, z ohnivých obětí Hospodinových.
அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
4 Když bys pak obětoval dar oběti suché, pečené v peci, ať jsou z mouky bělné koláčové nekvašení, zadělaní olejem, aneb oplatkové přesní olejem pomazaní.
“நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக.
5 Jestliže pak obět suchou na pánvici smaženou obětovati budeš, bude z mouky bělné olejem zadělané a nenakvašené.
நீ படைப்பது அடுப்பில் தட்டையான பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருப்பதாக.
6 Rozlámeš ji na kusy a naleješ na ni oleje, obět suchá jest.
அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒரு உணவுபலி.
7 Pakli obět suchou v kotlíku připravenou obětovati budeš, z mouky bělné s olejem bude.
நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
8 I přineseš obět suchou, kteráž z těch věcí bude Hospodinu, a dáš ji knězi, kterýžto donese ji k oltáři.
இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் யெகோவாவுக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து,
9 A vezma kněz z oběti té pamětné její, páliti je bude na oltáři, v obět ohnivou, vůně spokojující Hospodina.
அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.
10 Což pak zůstane z oběti té suché, bude Aronovi i synům jeho, svaté svatých, z ohnivých obětí Hospodinových.
௧0இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11 Žádná obět suchá, kterouž obětovati budete Hospodinu, nebude kvašena; nebo nižádného kvasu, ani medu nebudete obětovati v obět ohnivou Hospodinu.
௧௧“நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம்.
12 V oběti prvotin toliko obětovati budete je Hospodinu, ale na tento oltář neobětujte jich u vůni spokojující.
௧௨முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் யெகோவாவுக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது.
13 Také všeliký dar suché oběti své solí osolíš, a neodejmeš soli smlouvy Boha svého od suché oběti své. Při každé oběti své sůl obětovati budeš.
௧௩நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
14 Jestliže bys pak obětoval obět suchou z prvotin Hospodinu, klasy nové ohněm upražíš, a což vymneš z těch klasů nových, to obětovati budeš, suchou obět prvotin svých.
௧௪“முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
15 A poleješ ji svrchu olejem, kadidlo také vložíš na ni; obět suchá jest.
௧௫அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி.
16 I páliti bude kněz pamětné její z obilí zetřeného, a z oleje toho, se vším tím kadidlem jejím; v obět ohnivou bude Hospodinu.
௧௬பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு செலுத்தும் தகனபலி.

< 3 Mojžišova 2 >