< Izaiáš 19 >
1 Břímě Egyptských. Aj, Hospodin béře se na oblaku lehkém, a přitáhne na Egypt. I pohnou se modly Egyptské před tváří jeho, a srdce Egyptských rozplyne se u prostřed něho.
௧எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.
2 Nebo spustím Egyptské s Egyptskými, tak že bojovati budou jeden každý proti bratru svému, a přítel proti příteli svému, město proti městu, království proti království.
௨சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன்.
3 A na nic přijde duch Egyptských u prostřed něho, a radu jeho sehltím. I raditi se budou modl a kouzedlníků a zaklinačů a hadačů.
௩அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை அழிந்துபோகச்செய்வேன்; அப்பொழுது சிலைகளையும், மந்திரவாதிகளையும், இறந்தவர்களிடம் பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும் தேடுவார்கள்.
4 Dám zajisté Egypt v ruku pánů ukrutných, a král přísný panovati bude nad nimi, praví Pán, Hospodin zástupů.
௪நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கொடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்.
5 A vymizejí vody z moře, i řeka osákne a vyschne.
௫அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும்.
6 I vzdálí se řeky, opadnou a vyschnou potokové Egyptští, třtí i rákosí usvadne.
௬ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; பாதுகாப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கோரையும் நாணலும் வாடும்.
7 Tráva okolo potoka a při pramenu potoka, i vše, což se seje při potoku, uschne, zmizí a ztratí se.
௭நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற இலையுள்ள செடிகளும், நதியருகில் விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாமல்போகும்.
8 I budou žalostiti rybáři, a kvíliti všickni, kteříž mecí do potoka udici; a kteříž rozstírají síti na vody, na nouzi přijdou.
௮மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற அனைவரும் துக்கப்படுவார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.
9 Zahanbeni budou i ti, kteříž dělají věci lněné a hedbávné, a kteříž tkají kment.
௯மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், மெல்லிய ஆடைகளை நெய்கிறவர்களும் வெட்கப்படுவார்கள்.
10 Nebo síti jeho budou zkaženy, i všickni dělající rybníky pro ryby.
௧0மீன் வளர்க்கிற குளங்களுக்கு கூலிக்கு அணை கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும்.
11 Jistě žeť jsou blázni knížata Soan, moudrých rádců Faraonových rada zhlupěla. Jakž říkati můžete Faraonovi: Syn moudrých já jsem, syn králů starožitných?
௧௧சோவான் பட்டணத்தின் பிரபுக்களாக இருப்பவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமானது: நான் ஞானிகளின் மகன், நான் முந்தின ராஜாக்களின் மகன் என்று பார்வோனிடம் எப்படிச் சொல்கிறீர்கள்?
12 Kdež jsou, kde ti moudří tvoji? Nechať oznámí nyní tobě, vědí-li, co uložil Hospodin zástupů o Egyptu.
௧௨அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்தைக்குறித்துச்செய்த யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.
13 Zbláznila se knížata Soan, podvedena jsou knížata Nof, svedli Egypt přednější v pokolení jeho.
௧௩சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பு பட்டணத்தின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பச்செய்கிறார்கள்.
14 Hospodin pustil mezi ně ducha závrativého, i spraví to, že zbloudí Egypt při všelikém předsevzetí svém, tak jako bloudí ožralec při vývratku svém.
௧௪யெகோவா அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரச்செய்தார்; குடிவெறியன் வாந்தியெடுத்து, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியச்செய்கிறார்கள்.
15 Aniž bude dílo v Egyptě, kteréž by učinila hlava neb ocas, ratolest aneb sítí.
௧௫எகிப்தில் தலையாகிலும், வாலாகிலும், கிளையாகிலும், நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.
16 V ten den bude Egypt podobný ženám; nebo strašiti se a děsiti bude před zdvižením ruky Hospodina zástupů, kterouž on zdvihne proti němu.
௧௬அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள்.
17 A budeť země Judská Egyptu k hrůzi; každý, kdož zpomene na ni, strašiti se bude, pro radu Hospodina zástupů, kterouž zavřel o něm.
௧௭சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாக தீர்மானித்துக்கொண்ட ஆலோசனையினால் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் அதிர்ச்சியடைவான்.
18 V ten den bude pět měst v zemi Egyptské, mluvících jazykem Kananejským, a přisahajících skrze Hospodina zástupů, jedno pak nazváno bude město zpuštění.
௧௮அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, சேனைகளின் யெகோவாவை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று அழிக்கப்பட்ட பட்டணம் என்னப்படும்.
19 V ten den bude oltář Hospodinův u prostřed země Egyptské, a sloup při pomezí jejím Hospodinu;
௧௯அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே யெகோவாவுக்கு ஒரு தூணும் உண்டாயிருக்கும்.
20 Bude, pravím, na znamení a na svědectví Hospodinu zástupů v zemi Egyptské. A když volati budou k Hospodinu příčinou těch, kteříž by je ssužovali, tedy pošle jim spasitele a kníže, i vysvobodí je.
௨0அது எகிப்துதேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினால் அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.
21 I bude známý Hospodin Egyptským; nebo poznají Egyptští Hospodina v ten den, a ctíti jej budou obětmi a dary, a činiti budou sliby Hospodinu, i plniti.
௨௧அப்பொழுது யெகோவா எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர்கள் யெகோவாவை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும், காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து அவைகளைச் செலுத்துவார்கள்.
22 A tak bíti bude Hospodin Egypt, aby zbije, uzdravil jej; nebo obrátí se k Hospodinu, a on je vyslyší a uzdraví.
௨௨யெகோவா எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.
23 V ten den bude silnice z Egypta do Assyrie, i budou choditi Assyrští do Egypta, a Egyptští do Assyrie, a sloužiti budou Egyptští s Assyrskými Hospodinu.
௨௩அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர்கள் எகிப்திற்கும், எகிப்தியர்கள் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர்கள் அசீரியருடன் ஆராதனை செய்வார்கள்.
24 V ten den bude Izrael Egyptským a Assyrským jako třetí z nich, i budou požehnaní u prostřed země.
௨௪அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
25 Nebo požehná jim Hospodin zástupů, řka: Požehnaný lid můj Egyptský, a dílo rukou mých Assur, i dědictví mé Izrael.
௨௫அவர்களைக்குறித்துச் சேனைகளின் யெகோவா: எகிப்தியராகிய என் மக்களும், அசீரியராகிய என் கரத்தின் செயலும், இஸ்ரவேலராகிய என் சொத்தும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.