< Izaiáš 14 >
1 Nebo slituje se Hospodin nad Jákobem, a vyvolí zase Izraele, a dá jim odpočinutí v zemi jejich; a připojí se k nim cizozemec, a přídržeti se budou domu Jákobova.
௧யெகோவா யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே குடியிருக்கச்செய்வார்; அந்நியரும் அவர்களுடன் சேர்ந்து, யாக்கோபின் வம்சத்துடன் இணைந்து கொள்வார்கள்.
2 Nebo pojmou ty národy, a přivedou je k místu svému, i uvedou je v dědictví dům Izraelský v zemi Hospodinově, za služebníky a za děvky; a jímati budou ty, kteříž je zjímali, a panovati budou nad násilníky svými.
௨மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் இடத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் யெகோவாவுடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.
3 I staneť se v ten den, v němž tobě odpočinutí dá Hospodin od těžkosti tvé a strachu tvého, a od poroby těžké, v kterouž jsi byl podroben,
௩யெகோவா உன் துக்கத்தையும், உன் தவிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறச் செய்யும் அக்காலத்திலே,
4 Že uživeš přísloví tohoto o králi Babylonském, a řekneš: Aj, jak přestal násilník! Přestalo dychtění po zlatě.
௪நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! தங்க நகரம் ஒழிந்துபோனதே!
5 Potřískal Hospodin hůl bezbožných, prut panujících,
௫யெகோவா தீயவரின் ஆயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.
6 Mrskajícího lidi v prchlivosti mrskáním ustavičným, panujícího v hněvě nad národy, kteříž ssužováni bývali bez lítosti.
௬மிகுந்த கோபங்கொண்டு ஓய்வில்லாமல் மக்களை அடித்து, கோபமாக மக்களை அரசாண்டவன், தடுக்க யாருமில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
7 Odpočívá, jest v pokoji všecka země, zvučně prozpěvují.
௭பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாக முழங்குகிறார்கள்.
8 I jedloví veselí se nad tebou, i cedroví Libánské, řkouce: Jakž jsi klesl, nepovstal, kdo by nás podtínal.
௮தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது.
9 I peklo zespod zbouřilo se pro tebe, k vyjití vstříc přicházejícímu tobě vzbudilo pro tě mrtvé, všecka knížata země; kázalo vyvstati z stolic jejich i všechněm králům národů. (Sheol )
௯கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது. (Sheol )
10 Všickni tito odpovídajíce, mluví tobě: Což ty také jsi zemdlen jako i my, a nám podobný učiněn?
௧0அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள்.
11 Svrženať jest do pekla pýcha tvá, i zvuk hudebných nástrojů tvých; moli tobě podestláno, a červi tě přikrývají. (Sheol )
௧௧உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோனது; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. (Sheol )
12 Jakž to, že jsi spadl s nebe, ó lucifeře v jitře vycházející? Poražen jsi až na zem, ještos zemdlíval národy.
௧௨அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! தேசங்களை கீழ்ப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
13 Však jsi ty říkával v srdci svém: Vstoupím do nebe, nad hvězdy Boha silného vyvýším stolici svou, a posadím se na hoře shromáždění k straně půlnoční.
௧௩நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் மலையிலே வீற்றிருப்பேன் என்றும்,
14 Vstoupím nad výsosti oblaku, budu rovný Nejvyššímu.
௧௪நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
15 A ty pak stržen jsi až do pekla, pryč na stranu do jámy. (Sheol )
௧௫ஆனாலும் நீ ஆழமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். (Sheol )
16 Ti, kdož tě uzří, za tebou se ohlédati, a tebe spatřovati budou, říkajíce: To-liž jest ten muž, kterýž nepokojil zemi, a pohyboval královstvími,
௧௬உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து; இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், தேசங்களை அதிரவும் செய்து,
17 Obracel jako v pustinu okršlek země, a města jeho bořil, vězňů svých nepropouštěl domů?
௧௭உலகத்தை வனாந்திரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.
18 Všickni králové národů, což jich koli bylo, pochováni slavně doma jeden každý z nich;
௧௮தேசங்களுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்.
19 Ty pak zavržen jsi od hrobu svého jako ratolest ohyzdná, a roucho zbitých, ukrutně zraněných, kteříž se dostávají do jámy mezi kamení, a jako mrcha pošlapaná.
௧௯நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் ஆடையைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்கு வெளியே எறிந்துவிடப்பட்டாய்.
20 Nebudeš k oněmno v pohřbu přiúčastněn, nebo jsi poplénil zemi svou, lid svůj jsi pomordoval; nebudeť připomínáno na věky símě zlostníků.
௨0நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.
21 Připravte se k zmordování synů jeho pro nepravosti otců jejich, aby nepovstali, a dědičně neujali země, a nenaplnili svrchku okršlku zemského městy.
௨௧அவன் சந்ததியார் எழும்பித் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாமலிருக்க, அவர்கள் முன்னோர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம் செய்யுங்கள்.
22 Nebo povstanu proti nim, praví Hospodin zástupů, a zahladím jméno Babylona i ostatky syna i vnuka, praví Hospodin.
௨௨நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்; பாபிலோனுடைய பெயரையும், அதில் மீதியாக இருக்கிறதையும், சந்ததியையும் பின்சந்ததியையும் அழிப்பேனென்று யெகோவா சொல்கிறார்.
23 A obrátím jej v dědictví bukačů, a v jezera vod, a vymetu jej pometlem zahynutí, praví Hospodin zástupů.
௨௩அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
24 Přisáhl Hospodin zástupů, řka: Jistě že jakž jsem myslil, tak bude, a jakž jsem uložil, stane se,
௨௪நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் யெகோவா ஆணையிட்டுச் சொன்னார்.
25 Že potru Assyrského v zemi své, a na horách svých pošlapám jej, a odejde z nich jho jeho, břímě také jeho s ramene jejich sňato bude.
௨௫அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.
26 Toť jest ta rada, kteráž zavřína jest o vší té zemi, a to jest ta ruka vztažená proti všechněm těm národům.
௨௬தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
27 Poněvadž pak Hospodin zástupů usoudil, kdo to tedy zruší? A ruku jeho vztaženou kdo odvrátí?
௨௭சேனைகளின் யெகோவா இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?
28 Léta kteréhož umřel král Achas, stalo se proroctví toto:
௨௮ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
29 Neraduj se všecka ty země Filistinská, že zlámán jest prut toho, kterýž tě mrskal; nebo z plemene hadího vyjde bazališkus, jehož plod bude drak ohnivý létající.
௨௯முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று சந்தோஷப்படாதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.
30 I budou se pásti prvorození chudých, a nuzní bezpečně odpočívati budou; kořen pak tvůj umořím hladem, a ostatky tvé zmorduje.
௩0மிகவும் தரித்திரரின் தலைப் பிள்ளைகள் திருப்தியாகச் சாப்பிட்டு, எளியவர்கள் சுகமாகப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகும்படிசெய்வேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.
31 Kvěl, ó bráno, křič město, již jsi rozplynula se všecka ty země Filistinská; nebo od půlnoci oheň přijde aniž bude, kdo by stranil z obcí jeho.
௩௧வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுவதும் கரைந்து போகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
32 Co pak odpovědí poslové národů? To, že Hospodin upevnil Sion, v němž útočiště mají chudí z lidu jeho.
௩௨இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.