< 1 Samuelova 11 >
1 Tedy přitáhl Náhas Ammonitský, a položil se proti Jábes v Gálad. I řekli všickni muži Jábes k Náhasovi: Učiň s námi smlouvu, a budemeť sloužiti.
௧அந்தக் காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகையிட்டான்; அப்பொழுது யாபேசின் மனிதர்கள் எல்லோரும் நாகாசை நோக்கி: எங்களோடு உடன்படிக்கைசெய்துகொள்; அப்பொழுது உமக்கு பணிவிடை செய்வோம் என்றார்கள்.
2 Jimž odpověděl Náhas Ammonitský: Na ten způsob učiním s vámi smlouvu, jestliže každému z vás vyloupím oko pravé, a uvedu to pohanění na všecken Izrael.
௨அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரசெய்வதே நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை என்றான்.
3 I řekli jemu starší Jábes: Propůjč nám sedm dní, ať rozešleme posly po všech končinách Izraelských, a nebude-li žádného, kdo by nás vysvobodil, tedy vyjdeme k tobě.
௩அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் தூதுவர்களை அனுப்பும்படியாக, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை காப்பாற்றுகிறவர்கள் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
4 Když pak přišli ti poslové do Gabaa Saulova, a mluvili ta slova v uši lidu, pozdvihli všickni hlasu svého a plakali.
௪அந்தத் தூதுவர்கள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, மக்களின் காது கேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது மக்களெல்லோரும் சத்தமிட்டு அழுதார்கள்.
5 A aj, Saul šel za voly s pole. I řekl Saul: Co je lidu, že pláče? I vypravovali jemu slova mužů Jábes.
௫இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, மக்கள் அழுகிற காரணம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனிதர்கள் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
6 Tedy sstoupil Duch Boží na Saule, když uslyšel slova ta, a rozhněvala se prchlivost jeho náramně.
௬சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால் அவன் மிகவும் கோபப்பட்டு,
7 A vzav pár volů, rozsekal je na kusy, a rozeslal po všech krajinách Izraelských po týchž poslích, řka: Kdo by koli nešel za Saulem a za Samuelem, tak se stane s voly jeho. I připadl strach Hospodinův na lid, a vyšli jako muž jeden.
௭அவன் இரண்டு எருதுகளைப் பிடித்து, துண்டித்து அந்தத் தூதுவர்களின் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுல் மற்றும் சாமுவேலின் பின்செல்லாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படியே செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது யெகோவாவால் உண்டான பயங்கரம் மக்களின்மேல் வந்ததால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
8 I sečtl je v Bezeku; a bylo synů Izraelských třikrát sto tisíc, a mužů Juda třidceti tisíců.
௮அவர்களைப் பேசேக்கிலே கணக்கிட்டுப் பார்த்தான்; இஸ்ரவேல் மக்களில் மூன்று லட்சம்பேரும், யூதா மனிதர்களில் முப்பதாயிரம்பேரும் இருந்தார்கள்.
9 I řekli těm poslům, kteříž byli přišli: Takto povíte mužům Jábes v Galád: Zítra budete vysvobozeni, když slunce obejde. I přišli poslové, a oznámili mužům Jábes, kteřížto zradovali se.
௯அங்கே வந்த தூதுவர்களை அவர்கள் பார்த்து: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு மீட்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனிதர்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; தூதுவர்கள் வந்து யாபேசின் மனிதர்களிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
10 Tedy řekli muži Jábes Ammonitským: Ráno vyjdeme k vám, abyste nám učinili, cožkoli se vám za dobré viděti bude.
௧0பின்பு யாபேசின் மனிதர்கள்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் விருப்பத்தின்படி எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.
11 Nazejtří pak rozdělil Saul lid na tři houfy; i vskočili do prostřed vojska v čas jitřního bdění, a bili Ammonitské, až slunce dobře vzešlo; kteříž pak byli pozůstali, rozprchli se, tak že nezůstalo z nich ani dvou pospolu.
௧௧மறுநாளிலே சவுல் மக்களை மூன்று படைகளாக பிரித்து, விடியற்காலையில் முகாமிற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியர்களை முறியடித்தான்; தப்பினவர்களில் இருவர் இருவராக சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லோரும் சிதறிப்போனார்கள்.
12 I řekl lid Samuelovi: Kdo jest ten, jenž pravil: Zdali Saul kralovati bude nad námi? Vydejte ty muže, ať je zbijeme.
௧௨அப்பொழுது மக்கள் சாமுவேலைப் பார்த்து: சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனிதனை நாங்கள் கொல்லும்படி ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
13 Ale Saul řekl: Nebudeť dnes žádný zabit, poněvadž dnes učinil Hospodin vysvobození v Izraeli.
௧௩அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படக்கூடாது; இன்று யெகோவா இஸ்ரவேலர்களுக்கு மீட்பைக் கொடுத்தார் என்றான்.
14 I řekl Samuel lidu: Přiďte, a poďme do Galgala, obnovíme tam království.
௧௪அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜாவை ஏற்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
15 Šel tedy všecken lid do Galgala, a ustanovili tam Saule za krále před Hospodinem v Galgala, a obětovali také tam oběti pokojné před Hospodinem. I veselil se tam Saul a všickni muži Izraelští velmi velice.
௧௫அப்படியே மக்கள் எல்லோரும் கில்காலுக்குப் போய், அந்த இடத்திலே யெகோவாவுக்கு முன்பாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே யெகோவாவுக்கு முன்பாக சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.