< Psalmi 72 >
1 Salomonov. Bože, sud svoj daj kralju i svoju pravdu sinu kraljevu.
௧தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 Nek' puku tvojem sudi pravedno, siromasima po pravici!
௨அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3 Nek' bregovi narodu urode mirom, a brežuljci pravdom.
௩மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
4 Sudit će pravo ubogim pučanima, djeci siromaha donijet će spasenje, a tlačitelja on će smrviti.
௪மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 I živjet će dugo kao sunce i kao mjesec u sva pokoljenja.
௫சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 Sići će kao rosa na travu, kao kiša što natapa zemlju!
௬புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 U danima njegovim cvjetat će pravda i mir velik - sve dok bude mjeseca.
௭அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 I vladat će od mora do mora i od Rijeke do granica svijeta.
௮ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 Dušmani će njegovi preda nj kleknuti i protivnici lizati prašinu.
௯வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.
10 Kraljevi Taršiša i otoka nosit će dare, vladari od Arabije i Sabe danak donositi.
௧0தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 Klanjat će mu se svi vladari, svi će mu narodi služiti.
௧௧எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.
12 On će spasiti siromaha koji uzdiše, nevoljnika koji pomoćnika nema;
௧௨கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 smilovat će se ubogu i siromahu i spasit će život nevoljniku:
௧௩எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.
14 oslobodit će ih nepravde i nasilja, jer je dragocjena u njegovim očima krv njihova.
௧௪அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.
15 Stog' neka živi! Neka ga daruju zlatom iz Arabije, nek' mole za njega svagda i neka ga blagoslivljaju!
௧௫அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 Nek' bude izobila žita u zemlji, po vrhuncima klasje neka šušti k'o Libanon! I cvjetali stanovnici gradova kao trava na livadi.
௧௬பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.
17 Bilo ime njegovo blagoslovljeno dovijeka! Dok je sunca, živjelo mu ime! Njim se blagoslivljala sva plemena zemlje, svi narodi nazivali blaženima!
௧௭அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.
18 Blagoslovljen Jahve, Bog Izraelov, koji jedini tvori čudesa!
௧௮இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 I blagoslovljeno slavno mu ime dovijeka! Sva se zemlja napunila slave njegove! Tako neka bude. Amen!
௧௯அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20 Time se završavaju molitve Jišajeva sina Davida.
௨0ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.