< Psalmi 30 >
1 Psalam. Pjesma za posvećenje Doma. Davidov. Veličam te, Jahve, jer si me izbavio i nisi dao da se raduju nada mnom dušmani.
௧ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2 Jahve, Bože moj, zazvah te, i ti si me ozdravio;
௨என் தேவனாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
3 Jahve, izveo si mi dušu iz Podzemlja, na rubu groba ti si me oživio. (Sheol )
௩யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol )
4 Pjevajte Jahvi, vjernici njegovi, zahvaljujte svetom imenu njegovu!
௪யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவரைப் புகழ்ந்துபாடி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
5 Jer samo za tren traje srdžba njegova, a čitav život dobrota njegova. Večer donese suze, a jutro klicanje.
௫ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; மாலையில் அழுகை வரும், அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
6 U svojoj sreći rekoh: “Neću se pokolebati nikada!”
௬நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
7 Dobrotom si me, o Jahve, na goru nade postavio, ali čim lice sakriješ, sav se uplašim.
௭யெகோவாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
8 Tada, Jahve, zavapih k tebi i zazvah milosrđe Boga svojega:
௮நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9 “Kakva je korist od krvi moje, kakva korist da u grob siđem? Zar će te prašina slaviti, zar će naviještati vjernost tvoju?”
௯யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாக இரும்; யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
10 Slušaj, o Jahve, i smiluj se meni; Jahve, budi mi na pomoć!
௧0யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.
11 Okrenuo si moj plač u igranje, skinuo kostrijet s mene i opasao me radošću.
௧௧என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.
12 Zato ti pjeva duša moja i neće zamuknuti: Jahve, Bože moj, dovijeka ću te hvaliti!
௧௨என் தேவனாகிய யெகோவாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.